சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய ஒளி தகட்டில் ஓட்டை !

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்ணில் அமைத்துள்ளன. இந்த ஆய்வு நிலையம், 1998-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய ஒளி தகட்டில் ஓட்டை !
பூமியில் இருந்து சுமார் 370 கி.மீ. தொலைவில் சுற்று வட்டத்தில் சுற்றி வரும் இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப் பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார்.

சமீபத்தில் விண்வெளி மையத்தை சுற்றி விண்வெளி நடை (ஸ்பேஸ் வாக்) மேற் கொண்ட போது, இந்த ஓட்டையை கண்டு பிடித்தாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித் துள்ளார்.

இதனால் முக்கிய பாகம் எதுவும் சேதம் அடையாத தால் மகிழ்ச்சி யடைந்ததாக கூறியுள்ள அவர், ஓட்டை விழுந்த இடத்தை புகைப் படம் எடுத்து வெளியிட் டுள்ளார்.
விண்ணில் சுற்றி வரும் எறிகல் மோதியதால் இந்த ஓட்டை விழுந்திருக்கலாம் என்றும், முக்கிய பாகங்களில் எறிகல் ஊடுருவி யிருக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விண்கற்களால் இந்த ஓட்டை ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும், மனிதர்களால் கைவிடப்பட்ட விண்வெளி குப்பைகளால் 

பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அரிசோனா பல்கலைக் கழக கோள்கள் ஆராய்ச்சியாளர் ஜிம் ஸ்காட்டி தெரிவிக்கிறார்.
Tags:
Privacy and cookie settings