சூரிய ஒளி­யி­லி­ருந்து திரவ எரி­பொருள் தயா­ரிக்கும் செயற்கை இலை !

பிர­தான சக்தி முத­லான சூரி­ய­னி­ ­ருந்து கிடைக்கும் சக்­தியை அறி­வி­யலின் துணை­கொண்டு வெவ்வேறான சக்தி வடி­வங்­க­ளாக மாற்றும் முயற்­சிகள் தொடர்­கின்­றன.


ஆத­வனின் கதிர்ப்­புக்கள் சுமார் 81000 TW (Tera Watt) அள­வி­லான சக்­தியை புவி மேற்­ப­ரப்­புக்குக் கொண்­டு­ வ­ரு­வ­தாக அண்­ண­ள­வான கணிப்­புக்கள் தெரி­விக்­கின்­றன.

இச்­சக்தி தற்­போ­தைய உலகின் மின்­சக்தித் தேவையின் 5000 மடங்கு அள­வி­ன­தாகும். புவிக்கு வரும் சூரி­ய ­சக்­தியை இயற்­கை­யான தாவ­ரங்கள் தமது ஒளித்­தொ­குப்புப் பொறி­முறை வாயி­லாக தமது உணவுத் தயா­ரிப்­புக்குப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

இது­த­விர, செயற்­கை­யாக ஆக்­கப்­பட்ட சூரி­ய­க­லங்கள் போன்­ற­வையும் சூரி­ய­ஒ­ளியைப் பெற்று அதனை மின்­சக்­தி­யாக மாற்­று­கின்­றன. மிகு­தி­யான சூரி­ய­சக்தி எது­வித பயன்­மிக்க சக்தி வடி­வ­மாக மாற்­றப்­ப­டாமல் இருக்­கின்­றது.

இந்த இல­வ­ச­மாகக் கிடைக்கும் சூரி­ய­சக்­தி­யினை பய­னுள்ள சக்தி வடி­வங்­க­ளாக மாற்றும் பொறி­ மு­றை­களைக் கட்­ட­மைக்கும் தேடல்கள் தொடர்­கின்­றன.

அறி­வி­யலின் ஆய்­வு­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட சூரி­ய­க­லங்கள், சூரி­ய­சக்­தி­யினை மின் ­சக்­தி­யாக மாற்­றித் ­த­ரு­கின்­ற­ போ­திலும் இதி­லி­ருந்து கிடைக்­கப்­பெறும் வினைத்­திறன் போதி­ய­தாகக் காணப்­ப­ட ­வில்லை.

அத்­துடன் இச்­சூ­ரி­ய­க­லங்­ களை கட்­ட­மைக்கும் உற்­பத்திச் செலவும் உயர்ந்­த­தாகக் காணப்­ப­டு ­கின்­றது. சூரி­ய­ க­லங்­களின் வினைத்­தி­றனை அதி­க­ரிக்கும் நோக்­கி­லான ஆய்­வு­களும் உற்­பத்திச் செல­வினைக் குறைக்கும் புதிய வழி­மு­றைகள் குறித்த தேடல்­களும் தொடர்­கின்­றன.

இது தவிர, சூரி­ய­சக்­தியை மின்­சக்­தி­யாக மாற்றும் பொறி ­மு­றை­யல்­லாமல், வேதிப் பதார்த்­தங்­களில் உள்­ள­டங்கும் சக்தி வடி­வ­மாக மாற்றும் வழி­மு­றைகள் குறித்து அறி­வி­ய­லா ­ளர்கள் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

இவ்­வா­றான ஆய்­வொன்றின் முடி­வொன்று பெப்­ர­வரி மாதம் இரண்டாம் வாரத்தில் வெளி­யா­கி ­யுள்­ளது.

சூரி­ய­சக்­தியை வேறொரு வேதிச் ­சக்­தி­யாக மாற்றும் வழி­முறை தொடர்­பான ஆய்­வு­களை, அமெ­ரிக்­காவின் ஹாவேட் பல்­க­லைக் ­க­ழ­கத்தின் கீழ் இயங்கும் கலை அறி­வியல் பீடம், மருத்­துவ பீடம் மற்றும் Wyss நிறு­வனம் ஆகி­ய­வற்­றினைச் சேர்ந்த ஆய்­வாளர் குழு மேற்­கொண்டு வந்­தது.


மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வி­லி­ருந்து, சூரி­ய­சக்­தி­யினை திரவ எரி­பொ­ரு­ளாக பயன்­ப­டத்­தக்க ஐசோ­பு­றப்­பனோல் (Isopropanol) வேதிப் பதார்த்­தத்­தினை ஆக்கும் பொறி­முறை வெற்­றி­க­ர­மாகக் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த ஆய்வு குறித்த விப­ரங்கள், கடந்த பெப்­ர­வரி 9 ஆம் திகதி வெளி­யான

Proceedings of the National Academy of Sciences of the United States of America 

ஆய்விதழில்

Efficient Solar-t–o-F–uels Production from a Hybrid Microbial Water -Splitting Catalyst System 

தலைப்­பி­லான கட்­டு­ரையில் விப­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த ஆய்­விற்கு அமெ­ரிக்க விமா­னப்­ப­டையின் ஆய்­வு­க­ளுக்­கான அலு­வ­லகம், தேசிய அறி­வியல் நிறு­வகம் என்­பவை நிதி­யு­தவி அளித்­தி­ருந்­தன.

சூரி­ய­சக்­தியை புதிய சக்தி வடிவில் மாற்றும் புதிய வழி­மு­றையில் இரு ஊக்­கிகள் மற்றும் மர­பணு மாற்­றப்­பட்ட பக்­டீ­ரியா என்­பவை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஊக்­கி­க­ளான கோபோல்ட்- ­போறேட் (Cobalt-Borate) மற்றும் கலப்­பு­லோகம் நிக்­கல்-­ மொ­லிப்­டெ­னம்-­ நாகம் (Nickel- Molybdenum -Zinc alloy) என்­ப­வற்றின் முன்­னி­லையில், கிடைக்­கப் ­பெறும் சூரிய ஒளியின் சக்­தியால், நீர் மூலக்­கூறு ஐத­ரசன் மற்றும் ஒட்­சிசன் வாயுக்­க­ளாக உடைக்­கப்­ ப­டு­கின்­றது.

பின்னர், வெளி­வரும் ஐத­ரசன் வாயு­வினை மர­பணு மாற்­றப்­பட்ட பக்­டீ­ரி­யா­வான Ralstonia eutropha நுகர்­கின்­றது.

இந்­நு­கர்­வின் ­போது ஐத­ரசன் வாயு பக்­டீ­ரி­யாவின் உடலில் அனு­சேபத் தொழிற் ­பாட்­டிற்கு உட்­பட்டு, ஐத­ரசன் அய­னாகப் பிளக்­கப்­பட்டு, காப­னீ­ரொட்சைட் வாயு­வுடன் இணைக்­கப்­ ப­டு­கின்­றது.


இது இறு­தியில் ஐசோ­பு­றப்­பனோல் (Isopropanol) ஆக மாறு­கின்­றது.

தாவ­ரத்தில் நடை­பெறும் ஒளித்­தொ­குப்பில் நுக­ரப்­படும் அனைத்து தாக்­கு­பொ­ருள்கள் (சூரிய ஒளி, நீர் மற்றும் காப­னீ­ரொட்சைட்) அனைத்தும் இப்­பொ­றி­மு­றை­யிலும் ஈடு­ப­டுத்­தப்­ ப­டு­வதால், புதிய பொறி­முறைத் தொகுதி ‘செயற்கை இலை’ என அழைக்­கப்­ ப­டு­கின்­றது.

இங்கே உரு­வாக்­கப்­பட்ட ஐசோ­பு­றப்­பனோல் ஆனது பெற்­றோ­லிய எரி­பொருள் உற்­பத்தித் தயா­ரிப்பில் பக்­க­ வி­ளை­வாக வெளி­வரும் ஒரு வேதிப்­ப­தார்த்­த­மாகும். இதனை நிலக்­க­ரி­யி­லி­ருந்தும் உற்­பத்தி செய்­ய ­மு­டியும்.

மேற்­கு­றிப்­பிட்ட அணு­கு­ மு­றையில் ஐசோ­பு­றப்­பனோல் இனை உற்­பத்தி செய்­கையில் வளி­மண்­டல காப­னீ­ரொட்சைட் உப­யோ­கிக்­கப்­ ப­டு­வ­துடன், உற்­பத்திப் பொறி ­மு­றைக்­கான சக்­திக்கு சூரி­ய­சக்தி நுக­ரப்­ப­டு­வதும் இங்கே குறிப்­பி­டத் ­தக்­கது.

சூரிய ஒளி­யி­லி­ருந்து வேதிப்­ப­தார்த்தம் ஆக்கும் தொகு­தியின் வினைத்­திறன் குறித்து ஆய்­வா­ளர்கள் ஆராய்ந்­துள்­ளனர்.

தற்­போது கட்­ட­மைக்­கப்­ பட்­டுள்ள பொறி­ மு­றை­யா­னது கிடைக்­கப்­ பெறும் சூரி­ய­ சக்­தியின் 1 சத­வீ­தத்­தினை மாத்­தி­ரமே ஐசோ­பு­றப்­பனோல் வேதிப்­ப­தார்த்­தத்தில் சக்­தி­யாகச் சேமிப்­ப­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

இந்த வினைத்­தி­றனை 5 சத­வீ­த­மாக அதி­க­ரிப்­பது குறித்து ஆய்­வா­ளர்கள் தற்­போது கவனம் செலுத்தி வரு­கின்­றனர்.
Tags:
Privacy and cookie settings