பன்றியுடன் படுக்கையை பகிரும் சீன யுவதி !

அசுத்தம் மற்றும் நோய் களின் தாயகம் என்றும் தரித்தி ரத்தின் உருவம் என்றும் பலரால் கருதப்படும் பன்றி யுடன் சீனாவைச் சேர்ந்த ழூ சோ என்ற இளம் பெண் 
பன்றியுடன் படுக்கையை பகிரும் சீன யுவதி !
தனது படுக் கையை பகிர்ந்துக் கொள்ளும் புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

மூன்றாண்டு களுக்கு முன்னர் வெறும் இறைச்சி க்காக வளர்க்கும் நோக் கத்தில் ஒரு ஆண் பன்றியை வாங்கிய ழூ சோ நாளடை வில் அந்தப் பன்றியின் விளை யாட்டுத் தோழியாக மாறிப் போனார்.

வுஹுவா என்று பெயரிடப் பட்டுள்ள இந்தப் பன்றியுடன் தற்போது படுக்கை யை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு அந்த தோழமை பலப் பட்டுப் போய் உள்ளது.

117 பவுண்டு எடை கொண்ட வுஹுவாவை தன் மீது கிடத்திக் கொண்டு இவர் எடுத்துள்ள புகைப் படங்களும், 

வுஹுவாவை ழூ சோ முத்தமிட, ழூ சோவின் தோளில் சாய்ந்து கொண்டு வுஹுவா கொஞ்ச என சமூக வலைத் தளங்களில் வெளியா கியுள்ள
இந்த புகைப் படங்கள் பலரால் விரும்பப் படுவதுடன் மட்டுமின்றி, தங்களுக்கும் இது போன்ற ’பன்றித் தோழன்’ இல்லையே என பலரை ஏக்கமடையை வைத்துள்ளது. 

இதுபற்றி பூரிப்புடனும், பெருமிதத் துடனும் குறிப்பிடும் ழூ சோ. ‘வுஹுவா எங்கள் குடுபத்தில் ஒருவன்.

ஆனால், சரியான தூங்கு மூஞ்சிப் பையன். நான் கூட இருந் தாலும், இல்லா விட்டாலும் எப்போது பார்த் தாலும் தூங்கிக் கொண்டே இருப்பான்.

விழித்தி ருக்கும் கொஞ்சம் நேரம் மட்டும் எங்கள் வீட்டில் வளரும் முயல்க ளோடும், நாயோடும் விளையா டுவான்’ என்று கூறி சிரிக்கிறார்.
Tags:
Privacy and cookie settings