வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய !

வலைபக்கங்களில் நாம் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, நமக்கு தேவையான சில விபரங்கள் Table வடிவில் இருக்கலாம்.
 வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய!
இவற்றை நாம் Excel 2007 பயன்பாட்டில் தேவைப்படும் பொழுது வலைப் பக்கத்திலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யும் பொழுது, 

டேபிள் வடிவில் அல்லாமல், ஒரு அமைப்பில்லாமல் பேஸ்ட் ஆகியிருப்பதை கவனிக்கலாம்.
வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய!
இது போன்ற சமயங்களில், இணையத்தில் நமக்கு தேவையான விவரங்கள் அடங்கிய டேபிளை Excel 2007 -இல் எப்படி இறக்குமதி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்ட டேபிள் உள்ள பக்கத்தின் url ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். 

Excel ஐ திறந்து கொண்டு Data டேபில் உள்ள Get External Data பகுதியில் உள்ள From Web பொத்தானை சொடுக்குங்கள்.
வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய!
இப்பொழுது திறக்கும் New Web Query வசனப் பெட்டியில், அட்ரஸ் பாரில் காப்பி செய்து வைத்த url ஐ பேஸ்ட் செய்து Go பொத்தானை சொடுக்குங்கள்.
வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய!
இப்பொழுது அந்த url க்கான வலைப்பக்கம் Query திரையில் திறக்கும். இங்கு தேவையான Table க்கு மேற்புறமுள்ள மஞ்சள் நிற பெட்டியை க்ளிக் செய்வதன் மூலம் அந்த table ஐ தேர்வு செய்து கொள்ளலாம். 

ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை தேர்வு செய்து கொள்ள இயலும்.
வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய! 
Import பொத்தானை சொடுக்கிய பிறகு Excel sheet -இல் எந்த செல்லில் இந்த டேபிளை இருத்த வேண்டும் என்று தேர்வு செய்து கொண்டு, OK பொத்தானை சொடுக்குங்கள்.
வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய!
இதோ உங்களுக்கு தேவையான டேபிள் இப்பொழுது உங்கள் எச்செல் ஷீட்டில்.
Tags:
Privacy and cookie settings