சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை !

கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தைச் சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக் கின்றனர்.
சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை !
அறுசுவை உணவு: சீனாவில், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்துச் சாப்பிடுவது, அறுசுவை உணவாகக் கருதப்படுகிறது. 

கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன் படுத்துகின்றனர்.

இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன் படுத்தலாம்.

கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர்.

சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 10 மடங்காக உயர்ந்து உள்ளது என்கிறார்.

அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதற்கு முதலீடும் மிகக் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

பெரிய அளவுலாபம்:  

பண்ணை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும், அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளைத் தான் வளர்க்கின்றனர். 

இவை நீளமாக, பெரிதாகக் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு.
சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை !
இவற்றைக் கொல்லுவதும் எளிது என்கிறார் பூமிங். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கரப்பான் பூச்சி பண்ணøயில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. 

இப்போது சீன டி.வி.களில், கரப்பான பண்ணை வளர்ப்பு முறை பற்றி விளம்பரங்கள் பிரபலமாக உள்ளன.

பூச்சிகளும், புரதச்சத்தும்: 

பசி, வறுமையை எளிதாக ஒழிக்க ஐ.நா சபை பல ஆண்டு களாகவே பூச்சிகளை உணவாக உண்ண ஊக்கமளித்து வருகிறது. பூச்சிளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. 

இவற்றை வளர்ப்பது சுலபம். பன்றி, கோழி, ஆட்டுப் பண்ணைகள் போன்று, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது. மேலும், விலங்கி னங்களின் கழிவுகளில் உண்டாகும்.

மீத்தேன் வாயு, பூமியை வெப்ப மாக்குகிறது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கம்பளிப்புழு, வண்டு, தேள், வெட்டுக்கிளி, குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி உண்கின்றனர்.
சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை !
பலன்கள்: 

சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக் கழகங்கள் கரப்பான்பூச்சியை வைத்துப் பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.

 அணு கதிர்வீச்சைக் கூட, தாங்கும் சக்தி உடையது கரப்பான் பூச்சி. இவை மூலம் – எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings