டொல்பினுடன் உடலுறவு கொண்ட பெண் பயிற்சியாளர் !

அமெரிக்காவில் டொல்பினின் பெண் பயிற்சியாளர் அதனுடன் உடலுறவு கொண்டாதாக அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொல்பினுடன் உடலுறவு கொண்ட பெண்  பயிற்சியாளர் !
அமெரிக்காவின் விர்ஜின் ஐலேண்ட் பகுதியில் நாசா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 1960-களில் பீட்டர் என பெயரிடப்பட்ட 6 வயது டொல்பினுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியளிக்க மார்கரெட் ஹோவே என்ற 23 வயது பெண் நியமிக்கப்பட்டார்.

மார்கரெட் அங்கிலத்தில் பேசுவதை கேட்டு அதை நன்கு புரிந்து கொண்டு பதிலளிக்கும் இந்த பீட்டர் என்ற டால்பினுக்கும், மார்கரெட்க்கும் நாளடைவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முடிந்தவுடன் விர்ஜின் ஐலேண்டில் இருந்த அந்த பயிற்சிக் கூடம் மூடப்பட்டதையடுத்து, சில நாட்களிலேயே பீட்டரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அது பரிதாபமாக இறந்துள்ளது.

மேலும் பீட்டர் மனம் உடைந்ததால் அதற்கு மரணம் நேர்ந்ததாக, அதை கவனித்து வந்த மருத்துவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், பீட்டருக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியளித்த மார்கரெட் ஹோவே பிரபல ஆங்கில தொலைக்காட்சி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடன் இருப்பதை பீட்டர் மிகவும் விரும்பியதால் சில வேளைகளில் அது என் உடலின் மீது உரசி தனது தேவையை தெரிவிக்கும்.

அதன் தேவைக்கு நாம் இணங்காவிட்டால் ஆங்கிலம் கற்பதில் அக்கறை காட்டாமல் போய்விடுமோ? என்று கருதி, பீட்டரின் விருப்பத்துக்கு நான் உடன்பட்டிருக்கிறேன்.

முரட்டுத் தனமான எல்லையை டொல்பின் எட்டும் வரை அதில் நான் எந்த ஒரு அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை என கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings