பெண்கள் தேவாலய த்திற்கு வரும் போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித் துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லார்ட்ஸ் ப்ரொபெல்லர் ரிடம்ப்ஷன் தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஜோஹி.
அவர் தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், பெண்கள் உள்ளாடை அணிவது கிறிஸ்து அவர்களின் வாழ்வில் நுழைவதை தடுக்கிறது.
அதனால் பெண்கள் தேவாலயத்திற்கு வருகையில் உள்ளாடையின்றி ஃப்ரீயாக வாருங்கள். தேவாலயத்திற்கு வரும்போது உடலும், உள்ளமும் ஃப்ரீயாக இருக்க வேண்டும்.
அதற்கு உள்ளாடை தடையாக உள்ளது. என் பேச்சையும் மீறி யாராவது ரகசியமாக உள்ளாடை அணிந்து வந்தால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
தாய்மார்களே நீங்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடையின்றி வரவும். உங்களின் மகள்களும் உள்ளாடை அணியாமல் வருகிறார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும் என்றார்.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்கு வந்த பெண்களில் பெரும்பாலானோர் உள்ளாடை அணியாமல் வந்துள்ளனர்.