ரிஹானாவின் விநோத ஆடை !

நியூயோர்க் நகரில் கடந்த திங்­க­ளன்று நடை­பெற்ற “மெட் காலா” எனும் நிதி­சே­க­ரிப்­புக்­கான நிகழ்­வொன்றில் பிர­பல பாட­கியும் நடிகையு­ மான ரிஹானா, பாரிய ஆடை­யொன்றை அணிந்து வந்­தி­ருந்தார்.
27 வய­தான ரிஹானா அடிக்­கடி தனது அரைநிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துப வர். ஆனால், மேற்படி மெட் காலா நிகழ்வில் அவரின் ஆடையலங்காரம் வித்தியாசமாக இருந்தது.
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ் வில் ஹொலிவூட் நட்சத்திரங்கள் பல ரும் கலந்து கொள்வது வழக்கம்.  இவ்வருடம் இந்நிகழ்வில் பங்கு பற்றியவர்கள் சீனத் தொனிப்பொரு ளில் ஆடைகள் அணிந்து வந்திருந்தனர்.

இவர்களில் ரிஹானா மஞ்சள் நிறத்திலான பாரிய ஆடை யொன்றை அணிந்து வந்தார்.  ரிஹானா படிகட்டு களில் ஏறும் போது அவரின் ஆடையின் நீண்ட பின் பகுதியை பலர் இணைந்து தூக்கிச்செல்ல வேண்டியிருந்தது.
சீனாவைச் சேர்ந்த குவோ பெய் இந்த ஆடையை வடிவமை த்திருந்தார். பெண்ணொருவர் கைகளால் இந்த ஆடையை தைத்ததாகவும் இதற்கு இரு வருட காலம் தேவைப் பட்டதாகவும் ரிஹானா தெரி வித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings