தனது மனைவிக்கு தன்னைவிட ஒட்டகத்தில் தான் அதிக ஈர்ப்பிருக்கிற தென கூறி, மனைவியை விவாகரத்து செய்துள்ளார் ஒருவர். சவுதி அரேபியாவில் இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
ரியாத்தின் மேற்கு பகுதியில் உள்ள அந்த பெண்ணின் தந்தை வீட்டிற்கு இருவரும் சென்றிருந்தனர்.
அப்போது, அவளது தந்தை வளர்த்த அல் வலீஃப் என்ற ஒட்டகத்தை பார்த்த உடன் அவளது அளவுகடந்த அன்பை வெளிப் படுத்தினாள்.
அதுமட்டுமின்றி இந்த ஒட்டகம் தான் எனது டியர், ஸ்வீட்ஹார்ட் என்றும் அவளது கணவனிடம் கூறியுள்ளார்.
பின்னர், அவர்களது இல்லத்திற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்த, மிகைப் படுத்தப் பட்ட புகழால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் அவளை விவாகரத்து செய்துள்ளார்.