இங்கிலாந்தில் புதிய நாணயத்தை உருவாக்கி பள்ளி மாணவன் அசத்தல் !

புதிய 1 பவுண்ட் நாணயத்தை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளான்.  
இங்கிலாந்தில் புதிய நாணயத்தை உருவாக்கி பள்ளி மாணவன் அசத்தல் !
இங்கிலாந்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 1 பவுண்ட் நாணயம் பாதுகாப்பானது இல்லை என்பதால், புதிய நாணயத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இங்கிலாந்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் வெளிப்படுத்தும் விதமாக புதிய நாணயத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தமாக 6,000 பேர் இந்தப் போட்டியில் தங்கள் புதிய நாணய வடிவமைப்பை சமர்ப்பித்தனர்.
இவற்றில் டேவிட் பியரஸ் என்ற 15 வயது பள்ளி மாணவன் வடிவமைத்த 1 பவுண்ட் நாணயம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அந்த மாணவன் கூறும்போது ''இதை உருவாக்குவதற்கு நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டியிருந்தது.

முழு இங்கிலாந்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக புதிய நாணயம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று தெரிவித்தான்.
Tags:
Privacy and cookie settings