ட்விட்டரில் 140 எழுத்துக்களுக்குள் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட உள்ளது. ஆனால் ட்வீட்களுக்கு இது பொருந்தாது.
ஒருவருக்கு ஒருவர் அனுப்பிக் கொள்ளும் நேரடி தகவலுக்கு மட்டும் இந்த விதி தளர்ப்பை ஏற்படுத்த ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டிவிட்டரில் நாம் செய்யும் டிவிட்டுகள் 140 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது.
ட்விட்டரில் செய்யப்ப்டும் பதிவுகள் அனைத்தும் 140 எழுத்துக்களுக்குள் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்ற விதி தளர்கிறது.
இந்த நிலையில் ட்விட்டரின் தயாரிப்பு மேலாளர் சச்சின் அகர்வால், இந்த விதியை தளர்க்கும் நடவடிக்கையை கூடிய விரைவில் முடிக்க
ட்விட்டரின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் எனப்படும் தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தர விட்டுள்ளார்.
எனினும், இந்த தளர்வால் எவ்வித பயனும் இல்லை என்று ட்வீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.