சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகிலேயே மிகச் சிறந்த விமான நிலையம் என்ற விருதைக் கடந்த 3 ஆண்டுகளாகப் பெற்று வருகிறது.
தற்பொழுது இந்த விமான நிலையத்துக்குள் ஓர் அட்டகாசமான வனத்தையும் அருவியையும் உருவாக்க இருக்கிறார்கள்.
இதற்காக 7,300 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டி ருக்கிறது. ஓர் ஆண்டுக்கு 5 கோடியே 40 லட்சம் மக்கள் இங்கே வந்து செல்கிறார்கள்.
இனி 13 கோடி மக்கள் வரும் விமான நிலையமாக மாறும். ‘‘இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
அதனால் சிங்கப்பூருக்கு மக்களின் வருகையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
மக்களை ஈர்க்கவும், அவர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரவும் இந்த விமான நிலையத்தை அமைத்திருக்கிறோம். 2018-ம் ஆண்டு இந்தப் பணிகள் முழுமையடையும்’ என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.
விமான நிலையத்தைச் சுத்திப் பார்க்கவே ஒரு நாள் வேணும் போல!
ரஷ்யாவில் வசிக்கிறார் 23 வயது நடாலியா ட்ருகினா. பளு தூக்கும் போட்டிகளில் அத்தனை பிரிவுகளிலும் உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
14 வயதிலேயே பளு தூக்குதலில் ஆர்வம் வந்து விட்டது. அப்பொழுதே 40 கிலோ எடையைத் தூக்க ஆரம்பித்து விட்டார். அப்படியே தன்னுடைய உடலையும் பாடிபில்டராக மாற்றிக் கொண்டார்.
168 செ.மீ. உயரமும் 92 கிலோ எடையும் கொண்ட மிகப் பெரிய உருவமாக மாறிவிட்டார்
நடாலியா. நின்றுகொண்டு 240 கிலோ எடையையும், பெஞ்சில் படுத்த நிலையில் 170 கிலோ எடையையும் தூக்கக்கூடியவராக இருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் தன்னுடைய சாதனையை முறியடித்து, புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.
நடாலியாவை நேரில் பார்த்துப் பாராட்டும் மக்கள், இணையதளத்தில் கிண்டல் செய்கிறார்கள். மோசமான வார்த்தைகளைக் கொட்டி வருகிறார்கள்.
என்னுடைய இந்த உயரத்துக்குக் காரணம் பல்லாண்டு கடின உழைப்பு, ஆரோக்கியமான அளவான சாப்பாடு, நாள் தவறாத உடற்பயிற்சிகள் தான்.
என்னுடைய சாதனைகளைப் பற்றி விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.
பொழுதுபோக்குக்காக இணையதளத்துக்கு வருகிறவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை’’ என்கிறார் நடாலியா.