பிரித்தானியாவில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன ஆண் குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Sunderland நகரில் பிறந்து இரண்டு வாரங்களான ஆண் குழந்தையுடன் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட வேட்டையாடும் குணம் உடைய சிறிய ரக நாய் ஒன்று குழந்தையை கடித்து விட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்து அந்த நகருக்கு வந்த பொலிசார், அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய Northumbria நகர பொலிசார், அந்த நாயை கைப்பற்றி வெளியில் கொண்டு சென்றனர்.
மேலும், நாய் ஆபத்தானது என்பதால் அதனை கொன்று விடுவார்கள் என செய்தி வெளியாகி யுள்ளது. இதனிடையில், நாயை வளர்த்து வந்ததாக கூறப்படும் சுமார் 30 வயதுடைய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய Gillian Mitchell என்ற பொலிஸ் அதிகாரி, தற்போது குழந்தையின் மரணம் தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்றும்,
குழந்தையை இழந்துள்ள குடும்பத்தினரின் மனநிலையை நினைத்தால் வேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடப்பதால், வீட்டில் குழந்தைகளை பெற்றுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனம் செலுத்த வேண்டும்
என்றும், நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றின் அனுகு முறைகளை நன்கு உணர்ந்து வெளியே விட வேண்டும் என்றும் Gillian Mitchell வலியுறுத்தியுள்ளார்.