வலங்கைமான் அருகே பெண் ஒன்றியக்குழு உறுப்பினர் மீது தாக்குதல் 2 பேர் கைது

0 minute read
வலங்கைமானை அடுத்த அணியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது54). இவருடைய மனைவி கீதா. அ.தி.மு.க.வை சேர்ந்த கீதா, வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.


லோகநாதன் கும்பகோணம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கி மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார்.

இந்த கடனின் தவணை தொகையை வசூலிப்பதற்காக நேற்றுமுன்தினம் தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் வலங்கைமானை சேர்ந்த கலியபெருமாள் .

அவருடைய மகன் மணிகண்டன் (23), தமிழ்நேசன் மகன் அன்பு (23) ஆகிய 2 பேர் லோகநாதனின் வீட்டிற்கு வந்தனர். அப்போது கடன் தவணை தொகையை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு நடந்தது.

இதில் மணிகண்டன், அன்பு ஆகிய இருவரும் லோகநாதனையும், ஒன்றியக்குழு உறுப்பினர் கீதாவையும் கட்டையால் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அன்பு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings