பிரெஞ்ச் ஓபன் 20 வது கிராண்ட்ஸ்லாம் வென்று அசத்தல் !

பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனையை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்.


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி பாரீசின் ரோலண்ட் கேராசில் நடைபெற்றது.

இதில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரீனாவும், 13 வது இடத்தில் உள்ள செக் குடியரசின் லூசி சஃபரோவாவும் மோதினர்.

அனுபவம் வாய்ந்த செரீனாவின் அதிரடித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் லூசி திணறினார். எனினும் இரண்டாவது செட்டைக் கைப்பற்ற செரீனா போராடினார்.

முடிவில், செரீனா வில்லியம்ஸ், 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீராங்கனை லூசி சஃபரோவாவை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை அவர் 3 வது முறையாக வென்றுள்ளார்.

மேலும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் செரீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

serena

முதலிடத்தில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெஃபிகிராபும், 3 வது இடத்தில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்டினா நவரத்திலோவா மற்றும் கிறிஸ் எவர்ட்டும் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings