பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில், மறுமதிப்பீட்டில் 5 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைத்ததால் மாநில அளவில் இரண்டாமிடம் பெற் றுள்ளார் திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.கவுசிகா.
சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சி.கவுசிகா பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 1,186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றிருந்தார். இவர் ஆங்கிலப் பாடத்தில் 193 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இவர் தனது ஆங்கில விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தார். இதில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் கிடைத்ததால் மொத்த மதிப்பெண்ணாக 1,191 பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்றதால் பாடவாரியாக ஆங்கிலத்தில் முதலிடம் பெற்றார்.
மேலும், எஸ்.ஆர்.வி. பள்ளியில் படித்த மாணவர் எம்.முகேஷ்கண்ணன் மருத்துவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற இருவரையும் பள்ளித் தலைவர் ராமசாமி, செயலாளர் சுவாமிநாதன், துணைத் தலைவர் குமரவேல், பொருளாளர் செல்வராஜ், இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் துளசிதாசன் ஆகியோர் பாராட்டினர்.