வலங்கைமானை அடுத்த நீடாமங்கலத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு பெண்ணை கொலை செய்த பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண் பிணம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் ரெயில்வே கேட் அருகே தலையில் காயங்களுடன் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் நீடாமங்கலம் காமராஜர் காலனி 2–ம் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி மீனாட்சி (வயது55) என்பதும், இவர் பழைய நீடாமங்கலம் அங்கன்வாடி ஊழியர் என்பதும் தெரியவந்தது.
தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்ததால் மீனாட்சி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரிக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில், நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் அறிவழகன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ஸ்ரீதர், ஏட்டுகள் கமலநாதன், மணிவண்ணன், மோகன் ஆகியோரை கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
சொத்துக்காக கொலை
தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் மீனாட்சியின் மகள் பழைய நீடாமங்கலம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் மகன் மணிகண்டன் (23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சொத்துக்கு ஆசைப்பட்ட மணிகண்டன், மன்னார்குடி அசேசம் பாரதிதாசன் நகரை சேர்ந்த காளியப்பன் மகன் ராஜித் என்ற ரத்னகணபதி (20), மன்னார்குடி
அசேசம் சாய்பாபா நகரை சேர்ந்த மருதமுத்து மகன் சுந்தர்(20) ஆகியோருடன் சேர்ந்து தனது பாட்டி மீனாட்சியை கழுத்தை நெரித்து கொன்று, வையகளத்தூர் ரெயில்வேகேட் பகுதியில் உடலை வீசி தலையில் கல்லை போட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டன் உள்பட 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.