உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான மேரி க்ளேய்ர் நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமை விட மிகச் சிறியது எங்கள் குடிசை.
பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும் போல நானும் சந்தோஷமாகத் தான் இருந்தேன்.
ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச் சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்… இந்த சந்தோஷ மெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித் தான்.
ஆஃப்ரிக்காவைப் பொறுத்த வரை பெண்கள் தான் எல்லாமே. ஆண்களை விட அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.
வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள்.ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாக வேண்டும். எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, கல்யாணமா காதவள் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்து விட வேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அது தான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்த வரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே.அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம். அம்மா என்னிடம் வந்து, உங்கப்பா, மருத்து வச்சியை பாக்கப் போயிருக்கார்.
அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம் என்றார். அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி அம்மா அறிவுரை சொன்னாள்.சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சந்தோஷமாக படுத்தேன்.
முழிப்பு வந்தப் போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்து விட்டேன்.
வாரிஸ்............
அம்மா திடீரென்று எழுப்பினாள். நாங்கள், தூரத்துல தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இப்படி உக்காருவோம். அவ வருவா. என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்த போது, சர்க், சர்க் என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்து விட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, அங்க போய் உக்காரு என்றாள். அம்மா தான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள்.
அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்து விட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டாள்.
என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக் கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.
பிறகு ஒரு மரத் துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள். இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அது போல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களை விட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்து போய், ரத்தக் கறை படிந்திருந்தன.
த்துப்..
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக் கொண்டிருக்கும் போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டது போல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
பர்ர்க் என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துரு பிடித்து, பற்களோடு இருந் திருக்க வேண்டும்.
அடுத்த நொடி…
பர்ர்க் என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துரு பிடித்து, பற்களோடு இருந் திருக்க வேண்டும்.
நரநர வென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
அய்யோ…! -நரக வேதனை.
அசையக் கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக் கொண்டு படுத்துக் கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின. கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?
அய்யோ…! -நரக வேதனை.
அசையக் கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக் கொண்டு படுத்துக் கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின. கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன.
அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத் தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திரு க்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்து விட்டு மீதி உறுப்பு மூடப்பட்டு விட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டு விட்டது. இதற்கு, நான் செத்துப் போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய் விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக் கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப் பட்டையால சுற்றப் பட்டிருந்தன.
அம்மா என்னை நகர்த்தி யதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை.
என் பிறப்புறுப்பின் உணர்ச்சி மிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன. காற்று, நெருப்பு மாதிரி வீசிக் கொண்டிருந்தது. என்னால் சித்திர வதையைத் தாங்க முடியவில்லை.
ஒரு வழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக் கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப் பட்டிருந்தது.
காயம் குணமாகிற வரை அங்கே தான் இருந்தாக வேண்டும். முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது.
அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது. உயிரே போய் விடும்படி எரிச்சல்… திகுதிகு வென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு.
தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார் போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்து விடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித் தான் வாழ்ந்தேன்.
திடீரென்று ஒரு நாள் கிருமித் தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மா தான் பார்த்துக் கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது.
ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத் தோடு தான் இந்த சடங்கு நடைபெறுகிறது. என் பெண்மை சிதைக்கப் பட்டது கொடூரமான விஷயம் தான்.
ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும்.
பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த் தொற்று காரணமாவும் இறந்து போய் விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக் கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
வாரிஸ்! இங்க வாம்மா அப்பா அன்போடு அழைத்தார். தன் மடிமேல் என்னை உட்கார வைத்துக் கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
வாரிஸ்! இங்க வாம்மா அப்பா அன்போடு அழைத்தார். தன் மடிமேல் என்னை உட்கார வைத்துக் கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களை விட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற.
ஆனா… உன்னை பிரியப் போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு. அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தை களைப் பேசினார்.
அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப் போறேன்னு பயப்படுறாரோ! நான் அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு, அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன் என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்! என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீன மாக உனர்ந்தேன். அடுத்த நாள் காலை. நான், பால் கறந்து கொண்டிருந் தேன். வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ… அப்பா அழைத்தார்.
அவர் என் முகத்தை திருப்பி,
எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்! என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீன மாக உனர்ந்தேன். அடுத்த நாள் காலை. நான், பால் கறந்து கொண்டிருந் தேன். வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ… அப்பா அழைத்தார்.
அவரோடு அவரை விட மூத்த ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை.
அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக் கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு. வாரிஸ்! வந்திருக் கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.
வணக்கம்.
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தது.
அவனை கொலை வெறியோடு முறைத்து விட்டு, என் அப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்து விட்டது. சிரித்தவாறே… சரி, சரி, போய் வேலையைப் பாரு என்று சமாளித்தார். நான் மீண்டும் பால் கறக்க போய் விட்டேன்.
மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.
வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப் போற புருஷன்.
அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்
அது தாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டார்.
உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு அப்பா, வாயை பிளந்து கொண்டு பெருமை பேசினார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக் கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக் கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டு கிட்டு சாகலாம். ஒரு முடிவுக்கு வந்தேன். அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி, எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப் போறேன். என்றேன்.
அடிப்பாவி. எங்க ஓடுவ?
மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.
முதல்ல போய் படு பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள். நான் கையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கப் போய் விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மா தான்.
அந்தாள் முழிச்சிக்கிற துக்குள்ள எழுந்து ஓடு கிசுகிசுத்தாள். நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை.
நான் எழுந்து அவளை அணைத்துக் கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
எதுக்கும் கவலைப் படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே என்றாள்.
சத்தியமா
சொல்லி விட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலை வனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்க மில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடி வில்லாத ஒன்றாக எல்லை யற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்த போது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்து போய் இருந்தது.
அடிப்பாவி. எங்க ஓடுவ?
மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.
முதல்ல போய் படு பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள். நான் கையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கப் போய் விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மா தான்.
அந்தாள் முழிச்சிக்கிற துக்குள்ள எழுந்து ஓடு கிசுகிசுத்தாள். நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை.
நான் எழுந்து அவளை அணைத்துக் கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
எதுக்கும் கவலைப் படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே என்றாள்.
சத்தியமா
சொல்லி விட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலை வனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்க மில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடி வில்லாத ஒன்றாக எல்லை யற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்த போது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்து போய் இருந்தது.
வாரிஸ், வாரிஸ்
திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. என்னை அவர் பிடித்து விட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது.
அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும் வரை நான் ஓடிக் கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்க வேண்டும்.
அப்பா தோற்று விட்டார்.
சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.
ஆனால், இது நேற்றைய இரவைப் போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒரு சேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…
உஃஃப், உஃஃப்…
வெப்பத்தில் கொப்பளித்து, பாறை களில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சிய ளித்துக் கொண்டிரு ந்தது கால்கள். அப்படியே தூங்கி விட்டேன்.
சூரியன் கண் திறந்திருக்க வேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.
நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெ ல்லாம் தெரியாது.
பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போ தெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போ தெல்லாம் பயணத்தை நிறுத்தி விடுவேன்.
வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன். அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக் கிடந்தேன். அருகில் யாரோ குரட்டை விடுவது போல் இருந்தது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி?அப்பாவாக இருக்குமோ?!
பதறியடித்து எழும்பினால், கடவுளே..! அது ஒரு சிங்கம்.
என்னை முறைத்த படி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது.
கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக் குப்புற விழுந்தேன். நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப் போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன். வா! வந்து என்னைச் சாப்பிடு. சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.
எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப் போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந் தேன்.
ஹ.. ஹ… என்ன நினைத்ததோ, சிங்கம் பின் வாங்கி விட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.
அப்படியானால்?
கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்க வேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.
பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் !அது என்னவாக இருக்கும்?
நம்பிக் கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்று தான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப் பால் தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம்.
நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பி விடுவேன்.
வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழி நடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும் போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன்.
வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக் குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.
வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவை விட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை.
கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம் போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினு மினுப்பாகவும் இருக்கும்.
ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து விடுவாள்.
மொகாதிஷுவில் செல்வாக் குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக் கூடிய நாடோடி, என் அப்பா.
அம்மாவை கல்யாணம் செய்து கொள்ள அவர் விருப்பம் தெரிவித்த போது, வாய்ப்பே இல்லை என்று என் பாட்டி விரட்டி விட்டாராம்.
எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும் போது, அவரும் வீட்டை விட்டு ஓடி வந்து தான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார். அம்மா எப்போதும் என்னை அவ்டஹொல் என்று தான் கூப்பிடுவார்.
அவ்டஹொல் என்றால், சின்ன வாய் என்று அர்த்தம். ஆனால், வாரிஸ் என்பது தான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் பாலைவனப் பூ என்று அர்த்தம். நான் ஓடி வந்த கதையை விட்டு விட்டேனே!
சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப் போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம்.
அந்த நகரத்தை சுற்றி நிறைய பனை மரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப் பட்டிருந்தன.
மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலை நகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக் கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் எங்க அக்கா அமென் தெரியுமா? என்று விசாரித்தேன். உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே! -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,
இவளைக் கொண்டு போய் அமென் வீட்டில் விடு என்றாள். நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்த போது, அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
நல்ல வேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக் கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
நான்தான் அவளையும் பார்த்துக் கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப் போகவில்லை. ஒரு முதலாளி போல் என்னிடம் நடந்து கொண்டாள்.
மொகாதி ஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன. நான் என் சித்தி வீட்டுக்குப் போய், கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா? என்றேன். எதிர்பார்த்ததை விட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டு கூட இருக்கா. என்றார்கள். வழக்கம் போல், அங்கேயும் நான் தான் வீட்டு வேலை களை கவனித்துக் கொண்டேன்.
அம்மாவை தனியாக விட்டு விட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்தி தான் செய்தாக வேண்டும்.
நான் ஏதாவது செய்தாக வேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்ப வேண்டும். என்று தீர்மானித்தேன். பணம் சம்பாதிக்க வேண்டு மென்றால், வேலைக்குப் போக வேண்டுமே. தேடினேன்.
ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப் போய் விடுவேன் என்று தான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது…
ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.
அடுத்த நாலு வருஷமும் லண்டன்ல தான் இருக்கப் போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு
முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு, நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ் என்று கெஞ்சினேன். சித்தி, ஒரு நிமிஷம் யோசித்து விட்டு, ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக் கூடாது.
இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா. என்றார். சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார். ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம். மறு நாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்!
முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப் பட்டிருந்தது. ஒரு வழியாக லண்டன் வந்தாகி விட்டது.
ஆடம்ப ரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன்.
சித்தப்பா வுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப் பட்டிருந்தது. மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன்.
ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். அம்மாடி! அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை.
என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.
அடுத்த நாள்…
பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம் போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்க வேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக் கொடுத்தாள்.
எனக்கு 16 வயது இருக்கும் போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்து போய் விட, அவளது மகள் எங்களோடு வந்து விட்டாள்.
நான் தான் அவளை கான் வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ள வில்லை.
நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது.
அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்து கொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில் தான் படித்தாள்.
பிறகு, எப்போ தெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, என்னதிது? என்றேன். இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோ கிராபராம்
போட்டோ கிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?
ம்ம்… நான் அதை மறந்து விட்டேன்.
இதற்கிடையே சோ மாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லி விட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறு நாளே ஊருக்குத் திரும்பியாக வேண்டும்.
இதை நினைக்கும் போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது. சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன். நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்? சித்தப்பா கோபப்பட்டார். பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க.
நான் எப்படி யாவது சமாளிச்சுக்கிறேன் என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டு விட்டுக் கிளம்பினார்.
யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர் கொள்ள வேண்டும் எனக்குள் பயம் பரவத் தொடங்கியது. அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ஹல்வுவைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.
என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே? என்றாள் சோமாலியில். நாங்கள் முன்பின் அறிமுக மானவர்கள் இல்லை. என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார்.
இத்தனை நாள் அவரோடு தான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை
ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள். ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ
இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம். மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா? -ஹல்வு கேட்டாள்.
சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை. ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்து விட்டாள்.
பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவது தான் என் வேலை. வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள்.
அது தான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோ ரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவு தான்.
இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக் கொண்டேன். இனி தான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.
இந்த ஆளுக்கு என்ன தான் வேணுமாம்? ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோ கிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன். அதை அவர்கிட்டயே கேளு.
போனைப் போடு. நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு மைக்கோஸ். அவர் தான் அந்த அன்புக்குரிய போட்டோ கிராபர்.
அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்த போது, நான் வேறொரு உலகத்தில் விழுந்தது போல் உணர்ந்தேன்.
சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள். மைக் என்னிடம், யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல்.
நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன் என்றார்.
இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?
ஆமாம்
எனக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை.
எவ்ளோ பணம் தருவீங்க?
ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு மைக், தன் காமிராவை கையில் எடுத்தார். இரண்டு நாட்களுக் குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன.
எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.
ஒகே. போய் கண்ணாடியைப் பார்
வாவ்…! நானா இது? பட்டுப் போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம் போல மின்னினேன்.
ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்… மைக்கின் விரல்கள் க்ளிக் கொண்டே இருந்தன. வேலைக்கார வாரிஸ், இப்படியாகத் தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
இங்கே என்ன நடக்குது?
பைரேலி காலண்டர்
ஓ… சூப்பர். அப்டினா, என்ன?
போட்டோகிராபர் டெரன்ஸ் டொனோவன் தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித் திருந்தார்கள். இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப் போகிறோம்.
நீதான் அந்த மாடல் டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார். ஷூட்டிங் முடிந்த போது என் படம் அட்டைக்குத் தேர்வாகி இருந்தது. ஒரு மாடலாக, நான் வேக வேகமாக வளர்ந்தேன்.
பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழை போல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன.
ரெவ்லான் விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன்.
எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரி கைகளில் இடம் பிடித்தேன்.
ஜேம்ஸ்பான்ட் படத்தில் கூட நடித்தேன். ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை.
எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ் சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப் பட்டது.
மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பல மடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், தூக்கத்தின் போதே செத்து விட்டால் தேவலாம் என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்த போதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்து விட்டேன். சித்தி தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
ஆனால், உண்மைக் காரணம் என்ன வென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை. உதிரப் போக்கை நிறுத் தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணு தான் தீர்வு. வேற வழியில்லை என்றார் டாக்டர்.
எல்லா டாக்டர்களும் இதையே தான் சொன்னார்கள். இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின.
உடல் எடை கூடியது. இந்த வேதனைக்கு, உதிரப் போக்கையே தாங்கிக்கலாம் என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.
மீண்டும் வலி.
சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்
பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?
சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.
ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக் காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!
காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக் கொண்டு டாக்டர் மேக்ரேவை சந்தித்தேன். டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன்.
எனக்கு… அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை. இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா என்றார். நர்ஸை கூப்பிட்டு, இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல.
அவங்களையும் கூட்டிட்டு வாங்க. என்றார்.
ஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.
அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா? என்றான்.
தெரியாது
முதல்ல அவங்க கிட்ட பேசு. அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய் விட்டான். கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப் பட்டிருக்கிறேன்.
நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியா விலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
பாவம், சில பெண்கள் கற்பமாகக் கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப் பட வேண்டாம் என்றார்.
சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும். ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்த போது… உஷ்ஷ்ஷ்ஷ்…
ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தை களே இல்லை.
இந்த உலகில் இதை விட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது. 1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக் குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.
நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன்.
அவர் ஒப்புக் கொண்டார். என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.
சிலர், நான் தான் உன் அம்மா என்று வந்தனர். உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி என்றார் கெரி.
ஓ… ஆமால்ல! என்னை அவ்டஹொல்னு எங்க அம்மா கூப்பிடுவாங்க. இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?
நிச்சயமா
இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒரு நாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச் சிட்டோம்னு நினைக்கிறோம்.
அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்து போச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க என்றனர்.
நாங்கள் உடனடியாக எத்தி யோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறிய ரக விமானம் ஒன்றில், கலாடிக்கு பயணம்.
எத்தியோப்பிய, சோமாலிய எல்லை கிராமமான அங்கு தான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர் காத்துக் கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை. ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போது தான் அந்த வயதான மனிதர் வந்தார்.
என்னை தெரியுதா? நான் தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டு பிடிச்சித் தர்றேன் என்றார்.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்பட வில்லை. அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து, நீ நம்பப் போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மா தான் என்றார்.
நான் அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும் போதே தெரிந்து விட்டது.
அம்மா…
ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.
ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்று விட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.
அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும் என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான். டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா! என்றேன்.
என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?
அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.
எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு என்றார் அம்மா.அன்றிரவு நானும் அலியும் நட்சத்திர ங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான்.
எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன். மறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச் சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத் தாகணும். கிளம்பு என்கூட. என்றேன். இல்லை. உங்க அப்பா இங்க தான் இருக்கார். அவரை நான் தான் பாத்துக்கணும்.
அவர் இருக்கிற இடம் தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமா லியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடு. அது போதும்.
நான் அவளை இறுக அணைத்துக் கொண்டேன். அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.
இப்போது நான் லண்டன் திரும்பி விட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.
மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான மேரி க்ளேய்ர் உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.
சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகி ராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை இல்லையா?
இல்லை
என்ன?
ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல.
எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.
ரிப்போர்ட்டர் லாரா ஸிவ்வின் கண்கள் அகல விரிந்தன. ஐ டூ மை பெஸ்ட் சொல்லிக் கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். லாராவால் உணர்ச்சி களைக் கட்டுப் படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார்.
தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். என் நெருங்கிய நண்பர்கள் கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்து கொண்டு விட்டது.
ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்று வரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒரு போதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவி த்ததில்லை.
அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்கு ள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்து விடுகிறார்கள்.
மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்து விடுகிறார்கள்.
3,000 ஆண்டுகளாக வெட்ட வெளியில், எந்தவித மருத்தவ உபக ரணங்களும் இன்றி, மயக்க மருந்து கூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது.
சிலருக்கு கத்தி, கத்தரிக் கோல் கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள் தான். நான் பிழைத்து விட்டேன். ஆனால், லட்சக்கணக்கான என் சகோதரிகள்?
அறுவையின் போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின் போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?
மத அடிப்படை வாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்க வேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்! பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித் தான் பேசினேன்.
இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித் திருக்கிறது.
அடிப்படை வாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார்.
பிறகு சிங்கத் திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இது தான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.
வாரிஸ், அதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறாள்.