கின்னஸ் சாதனை முயற்சியாக ப.சங்கரன் (47) என்வர் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் புதன்கிழமை 3 மணிநேரம் தலைகீழாக சிரசாசனத்தில் நின்று சாதனை படைத்தார்.
மே தினத்தையொட்டி மகாவீர் கலை இலக்கிய பேரவை, மற்றும் ஸ்ரீரமணாலயா ஆன்மிக இளைஞர் கழகம் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் டைகர் கே. சம்சுதீன் தலைமை வகித்தார்.
ஜானகியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ், மைக்ரோ பாயின்ட் ஐ.டி.ஐ. நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், விருதுநகர் சுவாமி விவேகானந்தா யோகா மைய மாவட்டத் தலைவர் அய்யம் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக துணைத் தலைவர் ஆர். அழகுமுருகன் வரவேற்றார்.
ப.சங்கரன் சஞ்சீவி மலையில் தலைகீழாக மூன்று மணிநேரம் சிரசாசனத்தில் நின்று சாதனை நிகழ்த்தி காட்டினார். இவருக்கு ராஜபாளையம் டி.எஸ்.பி. அசோகன் பரிசு வழங்கி கெüரவித்தார்.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணிமன்றத் தலைவர் ராமராஜ், ஜே.சி.ஐ. மண்டலத் தலைவர் மாடசாமி, சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் உட்பட பலர் சங்கரனை பாராட்டி கெüரவித்தனர்.
ஆர்.அழகுமுருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மகாவீர் கலை இலக்கிய பேரவை மற்றும் ஸ்ரீரமணாலயா ஆன்மிக இளைஞர் கழகம் செய்திருந்தது.