வலங்கைமான் அருகே மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தை சேர்ந்த கோவிந்தகுடி அருகே வலங்கைமான் போலீசார் இன்ஸ்பெக்டர் சுரேக்ஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கம் போல் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது


குடமுருட்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து

மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த கோவிந்தகுடியை சேர்ந்த சாமிநாதன் மகன் பக்கிரி சாமி, பரசுராமன் மகன் முருகானந்தம், மருதையன் மகன் குருமூர்த்தி, கோவிந்தராஜ் மகன் ரவி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கொள்ளிடம் கலைஞர் நகர் அய்யப்பன், ஆலக்குடி மேட்டு தெரு சீனிவாசன், அனுமந்தபுரம் கலிய பெருமாள், மாங்கனாம் பட்டு ஞான சுந்தரம் ஆகியோர் தங்கள் மாட்டு வண்டியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.

அவர்களது மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
Tags:
Privacy and cookie settings