வலங்கைமான் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் !

வலங்கைமானில் 5 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கப்பட்டது.


திடக்கழிவு மேலாண்மை திட்டம் 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டது.

அதன் படி முதற்கட்டமாக 50 ஊராட்சிகளில் 5 ஊராட்சிகளை தேர்வு செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து கையாளும் பணிகள் தொடங்கியது.

இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் குருமூர்த்தி, குப்பை கிடங்கில் சேகரிக்கபட்டிருந்த குப்பைகளை கொட்டி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

 5 ஊராட்சிகளில் தொடக்கம் 

திருவாரூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆலங்குடியில் முதற்கட்டமாக தொடங்கிய திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் தொடர்ந்து ஒரே நாளில் அரித்துவாரமங்கலம், ஆவூர், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் தொடங்கப்பட்டது.

ஊரக பகுதிகளில் பொதுமக்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து அதாவது பிளாஸ்டிக் கழிவுகள், மக்காத தன்மை கொண்டவை.

இதுபோன்ற மக்காத தன்மை கொண்ட பொருட்களை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் மூலப்பொருளாக மாற்றபடுவதுடன் சாலைகள் அமைப்பது உட்பட பல்வேறு பயன்பாட்டிற்காக மக்காத குப்பைகள், வேதியியல் மாற்றம் செய்து தயார்படுத்தப்படுகிறது.

சுகாதார காவலர் 

மேலும் சுகாதார காவலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு தலா 1 பணியாளர் 150 வீடுகளில் சிவப்பு மற்றும் பச்சை பக்கெட்டுகளில் குப்பைகளை தரம் பிரித்து கையாள்வதுடன் உரக்குழிகளில் சேமிக்க நடவடிக்கை ஊராட்சி மன்றங்களின் வாயிலாக எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை வளம் பாதுகாத்தல், எதிர்கால ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்குதல் கருத்தில் கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊராட்சி

பொதுமக்கள் மற்றும் பலதரப்பினரும் அறிந்து கொள்வதுடன் விழிப்புணர்வு பெற்று இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஒன்றிய ஆணையர்கள் சேகர், தில்லைநடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலெட்சுமிஅழகுமுத்து (ஆலங்குடி), சவுந்தரராஜன் (அரித்துவாரமங்கலம்), ராமதாஸ் (ஆவூர்), கீதாரவிச்சந்திரன் (சந்திரசேகரபுரம்) கீதாதிருமலை (கோவிந்தகுடி)

மற்றும் வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ரம்யா, தாமரைச்செல்வி, மகேஷ்வரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜ்கபூர் மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings