5 டன் எடையுடன் கின்னஸ் சாதனை புரிந்த இருசக்கர வாகனம்

5 டன் எடையில் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம், உலகின் அதிக எடை கொண்ட இருசக்கர வாகனமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஸில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிரோ நீபேல். இருசக்கர வாகனமாக பிரியரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து உலகின் ராட்சத இருசக்கர வாகனமாக உருவாக்கியுள்ளார்.

மான்ஸ்டர் என்று பெயரிடப்பட்ட இந்த இருசக்கர வாகனத்தினை தனது ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பித்தார்.


ஹாலிவுட் படங்களில் வரும் வித்தியாசமான கிராபிக்ஸ் விலங்குகள் போன்று இருக்கும் இந்த இருசக்கர வாகனம் 4,740 கிலோ எடை கொண்டது. மேலும் இவ்வாகனம் ஐந்தரை மீ்ற்றர் நீளம் கொண்டதாக இருக்கிறது.


இந்த இருசக்கர வாகனத்தில் 800 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் டி55 பீரங்கியில் பொருத்தப்படும் எஞ்சின்தான் இந்த வாகனத்திலும் பொருத்தப்பட்டிருக்கிறது.


ராணுவ வாகனங்களின் பழைய உதிரிபாகங்களை கொண்டு இந்த வாகனத்தை டிலோவும் அவரது நண்பரும் வடிவமைத்துள்ளனர். இந்த பைக்கின் ஹேண்டில் பாரை பார்த்தாலே தலைசுற்றுகிறது.


அவ்வளவு நீளம். இந்த வாகனத்தின் பக்கவாட்டில் மற்றொருவர் உட்காருவதற்கு வசதியாக சைடு கார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.


Tags:
Privacy and cookie settings