உட்காராதீங்க உடல் நலம் கெடும் !

2 minute read
நாம் உட்கார ஆசைப்பட்டால் அதுவே நம்மை அழித்து விடும். உட்காருவது தான் நம்மைக் கொல்லும் நிஜ கொலையாளி. 
உட்காராதீங்க உடல் நலம் கெடும் !
ஒரே மாதிரி நிலையில் உட்கார்ந்து படிப்பதைக் குறைந்த பட்சம் 30லிருந்து 45 நிமிடத்திற்கு மேல் தவிர்க்கவும்.
நடுநடுவே ஏதாவது ஒரு வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு எழுந்து நிற்பது, நடப்பது அல்லது கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செல்வது என்கிற மாதிரி ஓர் ஐந்து நிமிட இடைவேளை இருக்கட்டும்.

நம் உடல் உறுப்புகள் உட்காருவதற் காகப் படைக்கப் பட்டவை அல்ல. அதனால் நீங்கள் நடுநடுவில் எழுந்து நின்று நடக்கணும்.

வயலில் வேலை செய்பவர்கள், காட்டில் சுற்றி அலைபவர்கள், மற்ற உயிரினங்கள் எல்லாமே கால்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறார்கள்.

ஆனால் நாம் ?உட்காருவது ஆறு மணிக்கு அதிகமாக இருப்பது உங்கள் ஆயுளை 40 சதவிகிதம் குறைக்கிறது. 

இந்தப் பழக்கம் நீடிக்கு மானால் 15 வருடத்திற் குள்ளாகவே நாம் நோயாளி ஆகி விடுவோம்.
சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !
நீங்கள் உட்கார ஆரம்பித்தவுடனே, உங்கள் கால்களின் தசையின் வேலைகள் நிறுத்தப்படுகின்றன.
கொழுப்பைக் கரைக்கிற 90 சதவிகிதம் செயலிழக்கிறது. உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு, இரண்டு மணி நேரம் முடிந்ததும் நல்ல கொலஸ்ட்ரால் 20% கிடைப்பதில்லை.

உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, மற்ற நிற்கிற வேலை பார்ப்பவர் களை விட 2 மடங்கு அதிகமாக இதய சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படும்.
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !
சதா உட்கார்ந்தே இருந்தால் இன்சுலின் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரப்பது நின்று நீரிழிவு நோய்க்குப் பிள்ளையார் சுழி போட்டு விடும். பிறகு என்ன? நிரந்தப் படுக்கை தான்!
மூன்று மணிக்கும் அதிகமாக டீ.வி. முன்பு உட்காருபவர்கள் தாங்களே 64%க்கும் அதிகமாக இதய நோயை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து மரணத்திற்கு அடியெடுத்து வைத்து விடுகிறார்களாம்.

எனவே, எப்போதெல்லாம் முடியுமோ, அந்தச் சமயங்களில் உட்காருவதைத் தவிர்த்து, குனிந்து, நடந்து, குதித்து இளமையோட வாழுங்க!
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings