பத்மாசனம் செய்யும் முன் தரையில் நேராக அமர்ந்து இரண்டு கால்களை நேராக முதலில் நீட்டி கொண்டு வலது காலை மடக்கி இடது தொடையின் மேலும்,
இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைத்து படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ள வேண்டும்,
பத்மாசனத்தில் அமர்ந்த பின்பு உடல் நேராகவும் பார்வை நேராகவும் இருக்க வேண்டும் உடலை இருக்கி படித்தவாறு இருத்தல் கூடாது நேராக அமர்ந்து சுவாசம் ( மூச்சு ) மெதுவாக விடவேண்டும்.
யோகாசனம் செய்யும் போது நம் உடலின் ஒவ்வொரு அசவுகளையும் நாம் உணர வேண்டும்
அப்போது தான் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும், நாம் உடலின் மாற்றங்களை அறிய முடியும்,
யோகாசனம் செய்யும் போது நம் உடலின் ஒவ்வொரு அசவுகளையும் நாம் உணர வேண்டும்
அப்போது தான் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும், நாம் உடலின் மாற்றங்களை அறிய முடியும்,
கைகளை நீட்டியவாறு சின் முத்திரையில் கைகளை வைத்து கொள்ள வேண்டும்,
மனதை ஒரு நிலைபடுத்தி 5 முதல் 10 நிமிடம் வரை இருக்கலாம். ஒவ்வொரு ஆசனம் முடித்ததும் கைகளை, கால்களை மெதுவாக விலகக்க வேண்டும் வேகமாக எடுக்க கூடாது.
ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது கால இடைவெளி இருத்தல் வேண்டும் கட்டாயம் மெதுவா செய்ய வேண்டும் .
ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது உடல் வேர்வை நிலை வரும் அளவிற்கு கடினமாக கஷ்டப்பட்டு செய்தல் கூடாது செய்ய முடியாத நிலையில் 2 அல்லது 3 நிமிடம் ஓய்வெடுத்து பின் தொடரலாம்…
பத்மாசனம் செய்வதால் ஞாபசக்தி அதிகமாகும், முதுகுத் தண்டு வலுப்படும் மற்றும் தொப்பை குறையும்.