நகத்தைக் கடித்த வாகன ஓட்டிக்கு அபராதம் !

ஸ்பெயின் நாட்டில் கார் ஓட்டும் போது நகத்தைக் கடித்த ஒரு வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நகத்தைக் கடித்த வாகன ஓட்டிக்கு அபராதம் !
ஸ்பெயின் நாட்டில் கடந்த 7ஆம் திகதி சாரதி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அவர் பயணத்தின் போது நகத்தைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவரை சலாமான்கா நகரத்தில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினர். மேலும் அவருக்கு 80 யூரோ அபராதமாக விதித்ததாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், வாகன ஓட்டி சரியான முறையில் காரை ஓட்டவில்லை. மேலும், காரை ஓட்டும் போது அவர் நகத்தைக் கடித்து கொண்டிருந்தார். 

எனவே தான், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த மாதம் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது வாயால் சுயிங்கத்தின் கவரைப் பிரிப்பதற்கு முயற்சி செய்ததாக வாகன ஓட்டி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings