கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் வானில் சிலுவை போன்ற அடையாளம் தோன்றியது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் இந்த அடையாளம் நீடித்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
சிலர் அந்த சிலுவை அடையாளத்தின் பின்னணியில் செல்போன் மூலம் தங்களை 'செல்பி' போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் சிலுவை அடையாளத்தை போட்டோ எடுத்து 'வாட்ஸ் & அப்' மூலமும் பேஸ்புக் மூலமும் தங்களது உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கு அனுப்பினார்கள். இதனால் திருனந்தபுரம் நகரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்று திருவனந்தபுரம் நகரத்திற்கு மேலே ஒரே நேரத்தில் வெவ்வேறு அடி உயரத்தில் இரண்டு விமானங்கள் கடந்து சென்றதால்
விமானத்தில் இருந்து வெளியான புகை காரணமாக இந்த சிலுவை அடையாளம் வானில் தோன்றியது என்பது தெரியவந்தது.
கொழும்பில் இருந்து தோகா சென்ற கத்தார் நாட்டு விமானம் 38 ஆயிரம் அடி உயரத்திலும், மாலத்தீவில் இருந்து பெய்ஜிங் சென்ற
சீன நாட்டு விமானமும் திருவனந்தபுரம் நகரத்தை ஒரே நேரத்தில் கடந்து சென்றதால் இந்த சிலுவை அடையாளம் தோன்றியது.
இந்த விமானங்கள் திருவனந்தபுரம் நகரத்தின் மேலே பறந்து சென்ற போது அதிக சத்தம் கேட்டதாகவும் இதனால் காரணம் புரியாமல் பொது மக்களிடையே பீதியும் ஏற்பட்டது.