ஒஸ்தி, தசாவதாரம் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். இந்தியில் உருவாகும் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
இதில் ஆபாச காட்சிகளும், கெட்டவார்த்தைகளுடன் கூடிய வசனங்களும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இப்படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதால் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பீகாரை சேர்ந்த ஒருவர் பாட்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி தணிக்கை குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை பீகாரில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தயாரிப்பாளரும், இயக்குனருமான பொகாடியா எழுத்துப்பூர்வமாக தனது பதிலை கோர்ட்டில் சமர்ப்பித்தார். படத்தில் எந்தவித ஆட்சேபகரமான காட்சிகளும் இல்லை.
கட் எதுவும் இல்லாமல் இப்படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. எனவே படத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டதாக பொகாடியா தெரிவித்தார்.