ஏமாற்றம் தரும் தோல்வி: டோனி புலம்பல்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணித்தலைவர் டோனி குற்றம் சாட்டியுள்ளார்.


இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று மிர்புரில் நடந்தது.

இந்தப் போட்டியில் வங்கதேசத்தின் இமாலய இலக்கை எட்ட முடியாமல் தவித்த இந்திய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், வங்கதேச அணி முதலில் இருந்தே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் எங்களுக்கு துடுப்பாட்டம் சாதகமாக அமையவில்லை.

பந்துவீச்சை பொறுத்த வரை, வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சரியாக செய்யவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர்.

வேகப்பந்து வீச்சை வங்கதேச வீரர்கள் திறம்பட எதிர்க் கொண்டனர். அடுத்த போட்டியில் கடும் சவால் அளிப்போம். ஆனால் இந்த தோல்வி எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings