இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாடசாலையில், மாணவி ஒருவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவரின் தாய் பள்ளி நிர்வாக இயக்குனரைத் தாக்கியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ள செயின்ட் சோல்ஜர் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் செல்போன் வைத்திருந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் செல்போனை பறிமுதல் செய்தனர். அந்த போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் மாணவியின் தாய் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பிறகு பள்ளி நிர்வாக இயக்குனரின் அறைக்குச் சென்று பள்ளி நிர்வாக இயக்குனரைத் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோவுக்கு இங்கே செல்லவும்!மகள் செய்த தவறைக் கண்டிக்காமல் பள்ளி நிர்வாக இயக்குனரை கண்மூடித்தனமாக அவர் தாக்கியது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.