வலங்கைமானை அடுத்த நீடாமங்கலம் அருகே உள்ள ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட ஜெயபால், நேற்றுமுன்தினம் இரவு பூச்சி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்தார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜெயபால் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.