தங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள் | Gold - Hallmark: seal, not just for looks !

முன் பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கை யின் அடிப்ப டையில் நன்கு பழகிய கடைகளில் தான் வாங்கி னார்கள்.
 


ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்து விட்டது. இந்த முத்திரை பொறித்த நகை களை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியா ரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப் படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாள மாக காட்டப் படுவது தான் ஹால் மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன.

இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும் பாலும் பயன் படுத்தப் படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படை யில் தங்கக் கட்டிகளாக வாங்கு கிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்கு வார்கள்.

இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தை விட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபர ணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோ கங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோக த்தைக் கலக்கும் போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்து விடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கி விட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம் தான் என்பது தெரிய வரும் போது வாங்கியவர்கள் நொந்து போய் விடுகிறார்கள்.

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப் பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்பு தான் இந்த ஹால்மார்க் முத்திரை யைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கி றார்கள்.


இந்த முத்திரை வழங் குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்க ளுக்கு லைசென்ஸ் தந்தி ருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தர பரிசோதனை!  


தங்களு க்குத் தேவையான நகைகளை பொற்கொல் லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளைய லுக்கு ஒருவர்,

நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொ ருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்த மாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக் காரர்கள்.

இப்படிச் செய்யப் படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக் கின்றனர்.

இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரை யைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள்.

எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.

முத்திரையில் ஏமாற்றி னால்..?  

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கி விட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலக த்தில் புகார் தெரிவிக் கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது.


தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப் பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கி னோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்ற த்தை அணுகலாம்.  சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும்.

ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள த்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டு பிடித்துவிட முடியும்.
  
ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷய மாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற் கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும் போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்... விகடன்
Tags:
Privacy and cookie settings