உலகிலேயே மிக உயரமான கோபுரம்.. கின்னஸ் சாதனை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள 2,080 அடி உயர கண்காணிப்பு டவர் உலகிலேயே உயரமான கோபுரம் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.


ஜப்பான் அரசு டிவி மற்றும் சில தனியார் டிவிக்களின் ஒளிபரப்பு சேவைக்காக தலைநகர் டோக்கியோவில் பிரமாண்ட கோபுரம் அமைக்க 2005-ல் முடிவு செய்யப்பட்டது.

2008-ல் தொடங்கிய கட்டுமான பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. டவரின் பெயர் ‘டோக்கியோ ஸ்கை ட்ரீ’. பணிகள் வரும் பிப்ரவரியில் முடிந்துமே மாதத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

செலவு ரூ.2,200 கோடியை தாண்டிவிட்டது. கண்காணிப்பு கோபுரமாகவும் பயன்படுத்தப்பட உள்ளது. ஓட்டல்களும் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ‘உலகிலேயே உயரமான டவர்’ என்று கின்னஸ் சாதனை படைத்துவிட்டது. இதற்கான சான்றிதழை கட்டிட நிறுவனத்தின் தலைவர் மிச்சியாகி சுசுகியிடம் கின்னஸ் அதிகாரி வழங்கினார்.
Tags:
Privacy and cookie settings