நாசாவின் டாவ்ன் விண்கலம் சீரஸ் என்னும் குட்டி கிரகத்தில் இறங்கி புதிய வரலாறு ஒன்றை படைத்துள்லது .இந்த சிறிய கிரகத்தின் போட்டோக்களை பிடித்து பூமிக்கு அனுப்பும் பணியில் ஈடுபடவுள்ளது .
இந்த விண்கலம் பூமியில் இருந்து 3.1 பில்லியன் மைல்ஸ் பயணம் செய்து , 7.5 வருடங்கள் பயணம் செய்து சீரஸ் கிரகத்தை அடைந்துள்ளது.
இந்த கிரகத்தை 1801 ஆம் ஆண்டு கண்டறிந்துள்ளனர் . முதலில் இதனை ஒரு கிரகம் என்றும் பின்னர் விண்கல் என்றும் அழைத்தனர். இப்போது இது ஒரு குட்டி கிரகமாக இருக்கிறது .
டாவ்ன் விண்கலம் முதலில் வெஸ்டா என்னும் விண்கல்லை ஆராய்ச்சி செய்தது . இப்போது சீரஸில் இறங்கியுள்ளது.
இதன் மூலம் ஒரே முறையில் இரண்டு இலக்குகளை எட்டிய ஒரே விண்கலம் என்ற சாதனையும் புரிந்துள்ளது.