பென் ட்ரைவை மாத்தி சொருவியதால் பஸ் ஸ்டாண்டில் ஆபாச படம் !

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது கல்பேட்டா. இங்கே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பேருந்து நிலயத்தில் இருந்த டிவியில் படம் ஒடிக் கொண்டு இருந்தது.
 
திடீரென ஆபாச படம் ஒட தொடங்கி விட்டது. அங்கு இருப்பவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பெண்கள் குழந்தைகள் வேறு அங்கு அதிக அளவில் இருந்தனர்.

பெண்கள் அந்த இடத்தை விட்டு கிளம்ப தொடங்கினர். சிலர் துணியை வைத்து டிவியை மறைக்க பார்த்தனர் ஆனால் முடியவில்லை.

இந்த சம்பவம் காலை 10.30 மணிக்கு நடந்தது, பீக் நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது, டிவியின் ஒலி வேறு அதிகமாக இருந்தது.

இதனைடையே கஷ்டப்பட்டு அரை மணி நேரம் கழித்து கேபிள் இணைப்பை துண்டித்து விட்டனர்.

இது குறித்து விசாரித்த போது கேபிள் ஆப்ரேட்டர் மன்சூர் என்பவர் தான் பார்க்க வைத்து இருந்த ஆபாச பட பென் ட்ரைவை தெரியாமல் இதில் சொருவி விட்டார்.

இதனால் தான் இத்தனை குழப்பம். போலீஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். குற்றம் நிருபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
Tags:
Privacy and cookie settings