மகாராஷ்டிராவில் ஆட்டோ ஓட்டுனராக இருந்த இளைஞர் ஒருவர் தனது கடின உழைப்பால் விமானியாக வளர்ச்சியடைந்துள்ளார். நாக்பூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் பந்தாவனே என்ற இளைஞரின் தந்தை செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
பள்ளிக்குச் செல்லும் போதே குடும்ப சூழ்நிலை காரணமாக டெலிவரி பாயாக ஆட்டோ ஓட்டும் வேலை பார்த்து வந்த ஸ்ரீகாந்த் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள டீ கடைக்காரர் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) விமானி படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்ரீகாந்த் மத்திய பிரதேசத்தில் உள்ள விமான பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார்.
பயிற்சியில் சிறந்து விளங்கிய ஸ்ரீ காந்த், வணிக விமான உரிமத்தைப் (commercial pilot licence) பெற்றார்.
ஆனாலும், விமானத்துறையில் உள்ள வேலை வாய்ப்பு குறைவு காரணமாக சில காலம் கார்ப்பரேட் எக்சிகியூட்டிவாக வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை விமானியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுனராக இருந்த இளைஞர் கடின உழைப்பால் விமானியாக வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.