டியூட்டி நேரத்தில் போலீஸ் பாரில் அழகிகளுடன் டான்ஸ் !

வேலை நேரத்தில் பாரில் நடன அழகிகளுடன் நடனமாடிய இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் தானே காவல்துறை இணை கமிஷனர் வி.வி.லஷ்மி நாராயணனின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம்
 ஒரு வீடியோ காட்சி வந்தது. அதில், இரண்டு போலீஸ்காரர்கள் பாரில் அழகிகளுடன் ஆபாச நடனம் ஆடும் காட்சி பதிவாகி இருந்தது.
உடனடியாக இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி அவர் துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

போலீசாரின் விசாரணையில், அந்த வீடியோ காட்சியில் நடனம் ஆடியது, தானே மான்பாடா காவல் நிலையத்தில் ஏட்டுகளாக பணி புரியும் சஞ்சய் பாபர் மற்றும் ரஷித் முலானி என தெரியவந்தது.

இதையடுத்து, பணி நேரத்தில் இரண்டு போலீசாரும் பாரில் நடனம் ஆடியது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இது மார்பிங் செய்யப்பட்ட காட்சிகள் என்றும், அவற்றில் இருப்பது தாங்கள் இல்லை என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இது குறித்து தானே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட போலீசார் இருவரும் நகரில் உள்ள 23 பார்களைக் கண்காணிக்கும் பணியில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings