போராடிய பெண்ணைக் காப்பாற்றாமல் படம் பிடித்த இளைஞர்கள்!

கேரளாவிலுள்ள முட்டபாலம் என்ற பகுதியில் ரயிலில் மேர்துண்ட பெண்ணைக் காப்பாற்றாமல் தாங்கள் வைத்திருந்த கைபேசியில் இளைஞர்கள் படம்பிடித்துள்ளனர்.
 
நேற்று மாலை 3.30 மணி அளவில் அந்தப் பெண் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ரயிலில் மோதுண்டு காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண், உதவி கோரிய போதும் அருகில் நின்ற இளைஞர்கள் தாம் வைத்திருந்த கைபேசியில் வீடியோ எடுப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர்.

பின்னர் வேறு சிலர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings