நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் ரசாயன பொருள் கலந்திருப்பதாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தில், ஏற்கனவே மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்ய பீகார் மாநில கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த பிரச்சினை மராட்டியத்திலும் எதிரொலித்தது. இந்த நிலையில், மேகி நூடுல்சின் மாதிரிகளை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், ரசாயன பொருள் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனினும், மேற்கொண்டு நடத்தப்படும் ஆய்வில் ஏதாவது தவறுகள் கண்டறியப்பட்டால்,
நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் சிவில் சப்ளைத்துறை மந்திரி கிரிஷ் பாபத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.