பாரம் தூக்கும் எந்திரம் கிரேன் ! #crane

கிரேன்களை’ நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இதை பாரம் தூக்கும் எந்திரம் என்றும் சொல்லலாம். நாரை என்ற பறவையின் தோற்றம் போல் இருப்பதால் இதை `கிரேன்’ என்று அழைத்தனர். 
பாரம் தூக்கும் எந்திரம் கிரேன் ! #crane
பல நூற்றாண்டு களுக்கு முன்பே இம்மாதிரிக் கருவியை போர்களில் பயன் படுத்தினர். எதிரியின் கோட்டை மதில் மேல் உள்ள பொறிகளைத் தாக்கி அழிக்க இது போன்ற அமைப்பு ஒன்றைப் பயன்படுத்தினர்.

இன்றைய கிரேன்கள், பெரும் எடையுள்ள பொருள்களை ஏற்ற, இறக்க, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் செல்லப் பயன்படுத்தப் படுகின்றன.

பெரிய பெரிய தொழிற்சாலைகளில், துறைமுகங்களில் இதை அதிகளவில் பயன்படுத்து கிறார்கள். கிரேனில் பல வகை உண்டு. 
பொதுவாக, கோபுரம் போல் உயர்ந்து நிற்கும் கிரேன் தான் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. இதன் அமைப்பு, நீண்டு, உயர்ந்த கோபுரம் போலிருக்கும். 

அதன் மேல், படுக்கை வாட்டில் இயங்கும் கை போன்ற அமைப்பு. அந்தக் `கையின் ஒரு முனையில் பல்வேறு பொருட்களைத் தூக்குவதற்கு வசதியான உபகரணங்கள்.
மிதக்கும் கிரேன்
அந்த உபகரணங்கள் ஏறவோ, இறங்கவோ ஏற்றபடி, கம்பிக் கயிறுகளால் `விஞ்ச்’ என்ற உருளையுடன் இணைக்கப் பட்டிருக்கும். இந்த உருளை, ஓர் எந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. 

கிரேனின் `கை’யின் மறுமுனையில் தூக்கப்படும் எடையைச் சமநிலைப்படுத்தவே இந்த அமைப்பு. மிதக்கும் கிரேன்களும் உண்டு. 
மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?
தரை தட்டிப் போன, மூழ்கிப் போன கப்பலை நீருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர இவை தான் உதவுகின்றன. இரும்புத் தொழிற் சாலைகளில், பாலம் போன்ற அமைப்புடைய கிரேன்கள் பயன்படுத்தப் படுகின்றன.
Tags:
Privacy and cookie settings