வலங்கை மானில் ஜீவசமாதி சுவர்கள் உடைக்கப் பட்டுள்ளது. இது குறித்து கோவில் அர்ச்சகர் போலீசில் புகார் கொடுத்து ள்ளார்.
போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி வழிநடப்பு பகுதி ஆற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான பூவானந்த நாதர் ஜீவசமாதி உள்ளது.
பழமையான இந்த சமாதி கோவிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக கோவில் பரம்பரை அறங்காவலர் மற்றும் உறவினர்கள் புனரமைத்து, சுற்று சுவருடன் கட்டுமான பணிகளை மேற்கொண்டதுடன் கும்பாபிசேகம் செய்து இருந்தனர்.
சம்பவத்தன்று மர்ம நபர்களால் இந்த ஜீவசமாதி கோவிலின் சுற்றுச்சுவர் பொக்லைன் எந்திரத்தால் உடைத்து அகற்றப்பட்டதாக கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியன் வலங்கைமான் போலீசில் புகார் செய்தார்.
விசாரணை புகாரில் தான் தினமும் கோவிலில் பூஜை செய்து வருவதாகவும், இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சென்னையில் வசித்து வருகிறார் எனவும் சம்பவத்தின் போது காலையில் பூஜை செய்துவிட்டு 10 மணியளவில் கும்பகோணம் சென்று விட்டு திரும்பபினார்.
2 மணியளவில் சம்பந்தப்பட்ட சமாதி கோவிலுக்கு வந்த போது கோவிலின் சுற்றுச்சுவர் முற்றிலும் உடைக் கப்பட்டு சுவரில் பதிக்கப்பட்டிருந்த நந்தி சிலைகளை பெயர்த்தெடுத்து கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்தது.
கோவிலின் உட்புறம் விநாயகர், சிவன், முருகன் உள்ளிட்ட சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதால், மேலும் இவைகளை தொடர்ந்து சேதப்படுத்தாமல் இருக்க 2-வது முறையாக இக்கோவிலின் சுவற்றை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.