காசு சேமிக்கப் பயன்படும் உண்டியல் ஏன் பன்றிப் பொம்மை வடிவத்தில் அமைக்கப்பட்டு `பிக்கி பேங்க்’ என்று அழைக்கப்படுகிறது?
இடைக்கால இங்கிலாந்தில் மண் குடங்களும், சட்டிகளும் `பிக்’ (pygg) எனப்படும் ஒரு குறிப்பிட்ட களி மண்ணால் செய்யப்பட்டன.
சமையலறைப் பாத்திரத்தில், அவசரத்துக்கு உதவும் என்று சில நாணயங் களைப் போட்டு வைப்பது வழக்கம் தானே!
1600-களில் இந்தப் பழக்கத்தை அறியாத ஒரு குயவனிடம் `பிக் பேங்க்’ செய்யுமாறு கூறப்பட்டது.
அதை அவன் தவறாகப் புரிந்து கொண்டான். அவன் பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மை செய்தான்.
அதன் முதுகில், நாணயம் போட ஒரு துளை அமைக்கப் பட்டது. அதிலிருந்து பிக்கி பேங்க் (piggy bank) வழக்கத்துக்கு வந்தது.