பணத்திற்காக பெண்ணிடம் கலவியில் ஈடுபடுபவன்... விபச்சாரம் !

ஸ்டார் ரூம்மில் புக் செய்து வோட்கா, ஸ்காச், ரம் எல்லாம் ஏற்பாடு செய்த வாடிக்கையாளர் வராத சந்தோஷத்தில் இருந்தாள் தீப்தி. எப்போதும் அறைக்குள் நுழைந்ததும்,
பணத்திற்காக பெண்ணிடம் கலவியில் ஈடுபடுபவன்... விபச்சாரம் !
ப்ளைட் பிடிக்கும் அவசரத்திலே வாடிக்கை யாளர்கள் நடந்துக் கொள்வார்கள். ஆனால், இந்த முறை ப்ளைட் லேடானதால், ஒரு நாள் பெரிய பணக்கார வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம். 
எதோ ஒரு பிஸினஸ் டீல்காக வரும் வெளிநாட்டு விருந்தினரை சந்தோஷப் படுத்த உள்ளூர் பணக்காரர் செய்த ஏற்பாடு. யார் வீட்டு பணமோ அனுப விப்போம் என்று இருந்தாள் தீப்தி.

அறையில் இருந்து போர் அடித்ததால், கீழ் இருக்கும் பர்மிட் ரூம்முக்கு சென்றாள். தன்னை போல் மட்டும் அல்லாமல், 

பெரிய பணக்கார பெண்களும் ஆண்களுக்கு போட்டியாக வோட்காவை குடித்துக் கொண்டு இருந்தனர். 

பெரும்பாலான பெண்கள் நடுத்தர வயதில் இருப்பவர்கள். யாரும் கணவனுடன் வரவில்லை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.
தான் தங்கியிருக்கும் ரூம் கணக்கில், தீப்தி ஒரு வோட்காவை ஆர்டர் செய்தாள். 
அப்போது, தனியாக அமர்ந்திருந்த ஒரு ஆண் தன்னை உற்று நோக்குவதை கவனித்தாள். தீப்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வோட்கா வந்ததும் ஒரு க்ளாஸ்ஸில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தாள். அவளை வைத்த கண் மாறாமல் அந்த ஆள் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தாள்.

இன்று, ஒரு நாள் ஆண் துணையில்லாமல் தூங்கலாம் என்று இருந்த தீப்தி, பெரிய ஓட்டலில் கிடைக்கும் பெரிய வாடிக்கை யாளரை விட்டுவிட மனம் வரவில்லை. 

சும்மா தனியாக பெரிய அறையில் தூங்குவதற்கு, பெரிய வாடிக்கையாளர் பிடித்து வைப்போம் என்று நினைத்தாள் தீப்தி.

மீண்டும் பணக்கார வாழ்க்கை இந்த வாடிக்கையாளர் மூலம் கிடைக்கலாம். 
யார் கண்டது, பெரிய ஆளாக இருந்தால் வெளிநாட்டுக்கு கூட துணைக்கு அழைத்து செல்லலாம். பணத்துக்கு பணம், சந்தோஷத்திற்கு சந்தோஷம்.
அவளாகவே வழிய சென்று அந்த ஆண்ணின் டேபிலில் அமர்ந்தாள். ஹாய் ! ஐ எம் தீப்தி என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள்.

ஐ எம் ஷாம். ஆர் யூ வெயிட்டிங் பார் சம்படி ? என்று கேட்டான்.

இல்ல...யூ..? என்று கேட்க, அவனும் இல்லை என்று மறுத்து இருவரும் வோட்கா, ரம் என்று குடித்துக் கொண்டு இருந்தனர்.

தீப்தி பேச பேச பதிலளித்தானே தவிர அவனாக எதுவும் கேட்கவில்லை. 

பேசவில்லை. ஒரு கட்டத்தில் தானே அதைப் பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தாள்.
ஷல் வீ கோ டூ ரூம் ? என்று ஷாம் கேட்க, தீப்தி முன்பே கேட்டிருக்க கூடாதா ? இவ்வளவு நேரம் இதற்கு மொக்கை போட வேண்டியதாக இருந்தது என்று நினைத்துக் கொண்டாள்.
எப்போது வாடிக்கையாளரிடம் பணம் விஷயம் பேசிய பிறகு தான் தீப்தி செல்வாள். 

ஆனால், பெரிய ஓட்டலில் ரூம் எடுத்திருப்பவன், இவனிடம் பேரம் பேசினால் நன்றாக இருக்காது. 

கண்டிப்பாக பெரிய அமௌண்ட் கிடைக்கும் என்று தீப்திக்கு தோன்றியது. அவனுடன் குடிப்போதையில் சென்றாள். ஏனோ தன் ரூம்முக்கு போக வேண்டாம் என்று ஷாம் மறுத்தான். 

சரி ! இருக்குகவே இருக்கிறது வெளிநாட்டு விருந்தினர்காக காலியாக இருக்கும் ரூம். தீப்தியும், ஷாமும் குடி போதையில் அறைக்குள் நுழைந்தனர்.

தான் பார்த்த வாடிக்கையாளர்களில் ஷாம் மிகவும் விஷயம் உள்ளவன். பெண்களிடம் அதிகம் பழகுபவனாலேயே அவளது அந்தரங்க தேவையை புரிந்துக் கொள்ள முடியும். 
ஷாமும் அப்படி பட்டவன் தான். என்ன சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.

தமிழ்படங்களில் நடக்கும் சென்சார் கட் செய்யப்படும் எல்லா காட்சிகளும் அந்த அறைக்குள் அரங்கேறியது.

இரவு இரண்டு மணி வரை முழித்து இருந்தாலும், காலையில் எட்டு மணிக்கே ஷாம் எழுந்து தீப்தியை எழுப்பினான்.

தீப்தி ! நான் காலேஜ் கிளம்பனும். ரூ.5000 பணம் கொடுத்திங்கனா போவேன்.
வாட் யூ மின் ???

விளையாடதீங்க தீப்தி ! ஒரு நைட்க்கு 5000 வாங்குவேன். நானும் நேத்து என்ஜாய் பண்ணேன். அட் லீஸ்ட் ரூ.3000 ஆவது கொடுங்க…!!
ஹோ காட்… யூ கிகலோ** !!!

** gigolo - பணத்திற்காக பெண்ணிடம் கலவியில் ஈடுபடுபவன். விபச்சாரன் ( இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருக்கிறதா தெரியவில்லை.)
Tags:
Privacy and cookie settings