வடமொழியில் பார்சுவ என்றால் பக்கம், உபவிஸ்த என்றால் அமர்ந்த மற்றும் கோணா என்றால் கோணம் என்று பொருள். பக்கவாட்டில் கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் கோணத்தால் இந்த ஆசனம் இப்பெயரைப் பெற்றது.
பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
செய்முறை:
கால்களை நீட்டித் தரையில் அமரவும். கால்களை முடிந்த அளவு பக்கவாட்டில் நகர்த்தி வைக்கவும். கால் பெருவிரல் களை கைகளால் பற்றிக் கொள்ளவும்.
இடது கால் பெரு விரலை இடது கையாலும், வலது கால் பெரு விரலை வலது கையாலும் பற்ற வேண்டும். சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
பாதங்களை கைகளால் பற்றி மூச்சை வெளியே விட்டு தலையைத் தரையில் பதிக்கவும். மார்பைத் தரையில் பதிக்க முயற்சிக்கவும்.
இந்நிலையில் சாதாரண மாக மூச்சு விட்டு சுமார் 5 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
பார்சுவ உபவிஸ்த கோணாசனம் வயிற்று தசைகளை வலுபடுத்துவதோடு வயிற்று உள் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயின்று வந்தால் உடலின் நெகிழ்வுத் தன்மை கூடும்.
சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?குடல் இறக்கத்தைச் சரி செய்கிறது. பெண்களுக்கு மாத விடாய்ப் பிரச்சனை களையும், பிரசவக் கோளாறு களையும் சரி செய்கிறது. இடுப்பு, கை, கால்கள் வலுப்பெறுகின்றன.