பேஸ்புக் சமூக வலை தளத்தில் குழந்தைகளை வக்கிரமாக சித்தரித்து கருத்துக்களை பதிவேற்றம் செய்தவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலை தளங்களில் குழந்தைகளை வக்கிரமாக சித்தரித்து புகைப் படங்கள் மற்றும் கருத்துக்கள் பதிவு செய்யப் படுவதாக கூறி துளிர் மற்றும் மகளிர் உலகம் ஆகிய தொண்டு நிறுவனங்கள், சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி. ஜெயகவுரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது.
இதில் புகைப்படங்களை வெளியிட்டு வக்கிரமான கருத்துக்களை வெளியிட்டவர் திருப்பதியை சேர்ந்த யாதவ் மணிகண்டா என்ற இளைஞர் என்பது தெரிந்தது.
இதையடுத்து திருப்பதிக்கு விரைந்து சென்ற போலீசார், மணிகண்டாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.