கின்னஸ் என்றால்?

உலக சாதனைகளை வெளியிடும் கின்னஸ் நிறுவனம், வியாபார சாதனைகள் பற்றியும் ஒரு புத்தகம், "கின்னஸ் புக் ஆப் பிசினஸ் ரிக்கார்ட்' என்று வெளியிட்டிருக்கிறது. சாம்பிளுக்கு சில வியாபார சாதனைகள்:
* உலகில் மிகவும் அதிகமானவர்களை வேலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனம், "இந்திய ரயில்வே!'

* அதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ். ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.

* உலகில் மிகவும் பழைய நிறுவனம்: "ஸ்டோரா கோப்பார்–பெர்க் பெர்க்ஸ்லாக்' என்ற நிறுவனம். மரம், உலோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் இது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ளது இந்த நிறுவனம்.

* உலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர்; தாமஸ் ஆல்வா எடிசன்! 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.

* அதிக சொத்துக்கள் உள்ள நிறுவனம்: ஜப்பானின்,  "ப்யூஜி பாங்க்!'

* உலகில் முதல் பில்லியனர்: அமெரிக்காவின் ஜான்.டி.ராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள்.

* இதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா? உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில் 38 மணி 2 நிமிடங்கள் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீரின் அளவு.

* உலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்ட மாற்றுதல் என்ன தெரியுமா?

1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து, பத்து போயிங் 747 விமானங்களை பெற்றது தான்.
Tags:
Privacy and cookie settings