தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சி தலைவரானார்.
அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகி விட்டதாக பிரச்சாரம் செய்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.
ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் இருந்த போது "எனது போராட்டம்" என்ற பெயரில் தன சுயசரிதையை எழுதினார். 1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.
ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய் விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை "நாசி கட்சி" என்று பெயர் மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழி வகுத்தார். இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.
ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார். 1993 ஜனவரி 30 ஆம் தேதி ஹிட்லரை பிரதமாராக நியமித்தார்.
பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியாக மாறினார்.
பாராளுமன்றத்தை கலைத்தார். இராணுவ திணைக் களத்தினையும், இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக் கொண்டார்.
அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார். இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.
யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.
தினமும் சராசரியாக 6000 முதல் 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர். ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 இலட்சம் ஆகும்.
1939 இல் அல்பேனியா, செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக் கொண்டு போலந்து நாட்டின் மீது படை எடுத்தான்.
இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது. யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.
ஆனால் போரில் அமெரிக்காவும், இரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது. ஜெர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.
இச்சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் இருந்தது. ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.
1945 ஏப்ரலுக்குப் பின் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின. ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.
ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்!
அதிர வைக்கும் அந்தரங்கம்:
சர்வாதிகாரி என்றாலே எல்லாமே முரட்டுத்தனமாகத் தான் இருக்கும் போல. ஜெர்மனியை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர்
தனது செக்ஸ் ஆசையைக் கூட்டுவதற்காக எக்குத்தப்பான காரியங்களைச் செய்து வந்தாராம்.
எலி விஷத்தை சாப்பிட்டுள்ளார். காளை மாட்டின் விந்தனுவை எடுத்துக் குடித்துள்ளார். கேட்கவே தாறுமாறாக வாந்தி வர வைக்கிறது அவர் செய்த காரியங்களைப் பார்க்கும் போது.
இது குறித்து ஒரு டிவி டாக்குமென்டரிப் படத்தில் தெரிவித்துள்ளனர். அதிலிருந்து சில
உடல் நலக் கோளாறுகள்:
ஹிட்லருக்கு ஏகப்பட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன. அவருக்கு பர்கின்சன் நோய் இருந்துள்ளது. மன அழுத்தம் இருந்துள்ளது.
அவரது விதைப் பை சரியாக இல்லை. செக்ஸ் ஆசையும் குறைவாகவே இருந்துள்ளது.
மனசு, உடம்பு கட்டுப்படவில்லை:
அவருக்கே தனது மனதும், உடம்பும், செக்ஸ் ஆசையும் தன்னை விட்டு நழுவிப் போய் வருவது தெரிந்துள்ளது. இதனால் அவற்றை சரி செய்ய பல உபாயங்களைக் கடைப்பிடித்துள்ளார்.
கொகைன்:
இதற்காக கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். ஆம்பிடமைன் ஹார்மோன் மருந்தை பயன்படுத்தியுள்ளார்.
டாக்டரின் ஆலோசனை:
அவருக்கு டாக்டராக இருந்தவர் தியோடர் மோரல். ஆனால் இவரை பலர் போலி டாக்டர் என்றும் கூறுகிறார்கள். இவர் ஆலோசனைப் படிதான் பல மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார் ஹிட்லர்.
ஒரு நாளைக்கு 80 மருந்து:
ஹிட்லருக்கு ஒரு நாளைக்கு 80 மருந்துகள் கொடுக்கப்பட்டனவாம். டானிக், அது, இது என்று மனிதர் மருந்திலேயே மூழ்கி இருந்துள்ளார்.
மாட்டு விந்து:
காளை மாட்டின் விந்தையும் அவர் எடுத்துக் குடித்துள்ளார். அதே போல எலி விஷத்தையும் கசாயம் போல குடித்துள்ளார்.
இதற்குக் காரணம் செக்ஸ் ஆசையைக் கூட்ட வேணடும் என்பதற்காகவாம். அதே போல பற்களைக சுத்தம் செய்ய எண்ணெயையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
ஊசி போட்டு:
மேலும் ஹிட்லர் தனது இளம் மனைவியை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக பல்வேறு ஊசிகளையும் போட்டு வந்துள்ளார். இதையும் தியோடர் தான் போட்டாராம்.
லிபிடோவை அதிரிக்க ஊசி:
அதே போல தினசரி தனது இளம் மனைவி ஈவா பிரவுனுடன் படுக்கை அறைக்குள் செல்வதற்கு முன்பு லிபிடோவைக் கூட்டுவதற்காக ஒரு ஊசி போட்டுக் கொள்வாராம் ஹிட்லர்.
ஊசி மருந்தால் தான் இப்படி மாறிட்டாரோ.. இந்த ஊசி மருந்துகள் தான் ஹிட்லரை முரட்டுத் தனமான,
வெறிபிடித்த மனிதராக மாற்றி பல ஆயிரம் யூதர்களைக் கொல்லக் காரணம் என்றும் பலர் சொல்கிறார்கள்.
பெரிய மனிதர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளும் கூட இப்படித் தான் பெரிதாக இருக்கும் போல...!
ஹிட்லரால் காப்பாற்றப்பட்ட யூதர்:
ஹிட்லரின் நாசிப்படைகள் கோடி கோடியாக யூதர்களை கொன்று குவித்தாலும், ஹிட்லராலும் ஒரு யூதர் காப்பாற்றப் பட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான ஜேர்மன் யூதப் பத்திரிகை ஒன்றில் பின்வரும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது முதலாம் உலக மகா யுத்தத்தின் போது ஏர்னஸ்ட் ஹெஸ் எனும் யூத நீதிபதி, ஹிட்லர் குழுவினருக்காக பணியாற்றினார்.
இதற்கு நன்றிக்கடனாக ஹிட்லரால் எழுதப்பட்ட விசேட கடிதம் ஒன்றினால், நாசிப் படைகளின் கொலை வெறியிலிருந்து குறித்த நீதிபதி காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஹிட்லர் எழுதிய அந்த கடிதத்தைக் கண்டு பிடித்த வரலாற்று அறிஞரான சுசன்னே மவுஸ் என்பவர் இந்த தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளார்.
மேலும் இக் கடிதம் ஹிட்லரின் கையொப்பத்துடன், அரச கட்டமைப்பில் இருக்கும் கட்டளைத் தளபதியின் கையெழுத்தும் இடப்பட்டு நாசிப்படைகளுக்கு பிரதி அனுப்பப்பட்டுள்ளது.
இதில் ஆகஸ்ட் 19, 1940 ஆம் ஆண்டு என்ற காலமும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்த நேரத்தில் நாசிகளின் கையில் கிடைத்ததால் அந்த யூத நீதிபதி, ஏர்னஸ்ட் ஹெஸ், நாசிகளின் கொடும் கொலை வெறியிலிருந்து காப்பாற்றப் பட்டார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.