செயற்கை மழை: மகாராஷ்டிர அரசு பரிசீலனை!

மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சியான பகுதிகளில், மேக விதைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மழையைப் பெய்ய வைக்க அந்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
 
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை மழையை உருவாக்குவதற்கு, சர்க்கரையை எரிபொருளாகக் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாநில அமைச்சர் ஏக்நாத் கட்úஸ, மும்பையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மேக விதைப்பு தொழில்நுட்பம் மூலம் செயற்கை மழையை உருவாக்குவதாகக் கூறும் நிபுணர்கள் எங்களை அணுகியுள்ளனர்.

மாநிலத்தின் வறட்சியான பகுதிகளான ஜலேகான், விதர்பா அல்லது மரத்வாடாவில் உள்ள சில கிராமங்களில் செயல்முறை விளக்கம் அளிக்குமாறு அவர்களிடம் கேட்டிருக்கிறோம்.

சோதனை முயற்சி வெற்றியடைந்துவிட்டால், செயற்கை மழையை உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் அவர்.
Tags:
Privacy and cookie settings