நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றின் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண் நடனக்கலைஞர் ஒருவர் நடனமாடினார்.
அப்போது பார்வையாளர்கள் தங்களது தாய் மொழி பாடல் ஒன்றுக்கு அவரை நடனமாடும் படி கூறினர். அதனை பெண் நடனகலைஞர் ஏற்கமறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பார்வையாளர்களில் ஒருவரான பப்லு குமார் என்பவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பப்லு குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட அந்த பெண் நடனக்கலைஞரின் பெயர் பியூ (வயது 23). மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமண விழா போன்றவற்றின்போது நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார்.
Tags:
Privacy and cookie settings