தோள் பட்டைகள் வலுப்பெற லோலாசனம் | Lolasanam !

யோக கலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு ஒப்பற்ற கலையாகும்.
லோலாசனம்
இது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பங்கு வகிக்கிறது.

செய்முறை:

1. பத்மாசன த்தில் அமர்ந்து தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கை களை தரையில் பதிக்கவும்.

2. ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்தால் உடலை மேலே தூக்கவும்.

3. இந்நிலையில் மூச்சை நிறுத்தி ஒரு சில விநாடிகள் இருக்கவும்.

4. மூச்சை வெளி விட்டு பத்மாசனத்திற்கு வரவும்.
பலன்கள்:

1. கைகள், மணிக்கட்டுகள், தோள் பட்டைகள் வலுப்பெறும்.

2. வயிற்றுத் தசைகள் மேம்பாடு அடைகின்றன.

3. உள்ளுறுப்புகளின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.

4 கை, கால்களிருக்கும் வேண்டாத தசைகளைக் குறைக்கிறது.
Tags:
Privacy and cookie settings