தஞ்சை அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு !

0 minute read
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமதுசகித் மகன் பகத் (வயது 19).


இவர் மோட்டார் சைக்கிளில் தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings